சீனாவின் கடன் காலனித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கின்றது சிறிலங்கா அரசாங்கம் என தமி;ழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
சீனாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம், தமிழர் தாயக பகுதிகளில் தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புக்கான தளங்களையோ உருவாக்க பின்னடிக்கிறது.
பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் தமது முதலீட்டில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க தயாராக இருக்கின்றர், ஆனால் அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையின் சட்டதிட்டங்கள் அதற்கு தடைகளை ஏற்படுத்துகிறது.
Port City விவகாரம் என்பது ஒரு பின்கதவு இராஜதந்திரம்
உருவாக்கப்படும் இந்த Port City தீவில் என்ன நாணயம் பயண்படுத்தப்படப் போகிறது? இலங்கை நாயணயமா? அமெரிக்க நாணயமா? அல்லது சீன நாணயமா?
இத்தீவில் எந்த காவல்துறை கடமையாற்றப் போகிறார்கள்? இலங்கையின் காவல்துறையா? அல்லது சீனாவின் காவல்துறையா? இதற்கான பதிலை அரசு பகிரங்கமாக மக்களுக்கு கூற வேண்டும்.
சீனாவால் உருவாக்கப்படும் 7 தீவுகளில் 7ஆவது தீவாக இலங்கையில் இந்த Port City திட்டம் மூலம் இந்த தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த தீவை உருவாக்க கடலை மூடுவதற்கு மட்டக்களப்பு ஏறாவூரில் இருந்தும் மணல் எடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் பல இடங்களில் நிலங்களை பள்ளங்களாக்கி கடலை மூடி இத் தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது