ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம், என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தற்கொலைதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாட்டம்!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை தமது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக காவல் துறை சடலத்தை அடக்கம் செய்ய முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ...
Read More »12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று ...
Read More »ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு போராட்டம்!
கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்கு மாறியது. ஒப்பந்தப்படி ஹாங்காங்குக்கு என்று தனி சட்டம், தன்னாட்சி உரிமை மற்றும் குறிப்பிட்ட உரிமைகள் தொடருவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சு சுதந்திரம், நீதி சுதந்திரம், தனி சட்டம், தனியான பொருளாதார கட்டமைப்பு மற்றும் ஹாங்காங் டாலரை பணமாக தொடர்ந்து கையாள்வது ...
Read More »அநுராதபுரத்தில் 8000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் !
பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் 8000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்படவுள்ளதாக அநுராதபுரம் வலய காவல் துறை அத்தியட்சகர் திலினஹேவா பத்திரன தெரிவித்தார். பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வலயங்களின் பாதுகாப்புக்காக 4000 காவல் துறையினரும் 2000 இராணுவ வீரர்களும் 1000 சிவில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடற்படையினர் என மொத்தம் 8ஆயிரம் பாதுகாப்பு ...
Read More »தர்ம சக்கர ஆடை விவகாரம் ! காவல் துறை அதிகாரிக்கு இடமாற்றம்!
மகியங்கனை, ஹசலக காவல் துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் சந்தன நிஷாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஹஸலக பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக காவல் துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் இவ்வாரு குருணாகல் காவல் துறை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read More »பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா தயார்!
சகல இன மக்களிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய அமெரிக்கா தயாராகவுள்ளது. அதேபோன்று பயங்கரவாத தாக்குதல்களை நாட்டில் இருந்து முழுமையாக ஒழிக்க சிறிலங்கா அரசாங்கம் கேட்கும் அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்தாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தூதுவர் எலைனா பீ.டெப்லிட்சுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று ...
Read More »அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள ஈழ அகதியின் வேண்டுகோள்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின் குடிவரவு தீர்ப்பாயத்திற்கு அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் ...
Read More »முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் !
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் ...
Read More »ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும்!
மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றிப் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கப்படும் ...
Read More »