அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் நபர் ஒருவர் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். காவல்துறையினர் சிறிய எண்ணிக்கையானவர்கள் கத்திக்குத்திற்குஇலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின் போர்க் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்தியாசாலையில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கோத்தாவிற்கு விதித்த தடை நீக்கம்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விஷேட மேல் நீதிமன்றால் இன்று நீக்கப்பட்டுள்ளது. அரச நிதி மோசடியில் கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விஷேட மேல் நீதி மன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிய போது எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
Read More »நான் குற்றமற்றவன்! -நிஸாம்தீன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர், குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு அவுஸ்திரேலிய காவல் துறயால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நான் மாணவர் வீசாவில் இருந்ததுடன், ஆசிய பிரஜையாக இருந்தமையே காரணமாகும் என அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பிரஜை கமர் நிஸாம்தீன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா பிரஜையான கமர் நிஸாம்தீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். நேற்று ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் பயணித்த தொடருந்து!
அஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் வேகமாக சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சரக்கு தொடருந்து 268 பெட்டிகளைக் கொண்டுள்ளது. அது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் பயணித்துள்ளது. அந்த தொடருந்து தடம் புரண்டதில் சுமார் 1,500 மீட்டர் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.அந்த ரயில் சுரங்க நிறுவனமான BHPக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக ஒருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. ஓட்டுநரில்லா தொடருந்தில் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய ...
Read More »நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு மைத்திரி திட்டம்!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதிய பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், – நாடாளுமன்றத்தை இன்றிரவு ...
Read More »தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது என்ன ?
அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குமென தமிழ் தேசிய கூட்டமைப்புக் குழு ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளது. இதேவேளை, தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதியும் குறித்த வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாகவும் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ...
Read More »விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார்! – தமிழரசுக் கட்சி
முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மெல்பேர்ன் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டி!
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டியில் Cross Counter என்ற குதிரை வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை Marmelo பெற்றுக்கொண்டது. அதேநேரம் A Prince of Arran என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது. மெல்பேர்ன் கிண்ண குதிரைப்பந்தயப் போட்டியானது அவுஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் போட்டி என வர்ணிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Read More »சம்பந்தனை சந்திக்கிறார் புதிய அமெரிக்க தூதுவர்!
எதிர்க் கட்சித் தலைவரும் தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அதன்படி இச் சந்திப்பானது எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
Read More »நவுறு சிறுவர்களை அவுஸ்திரேலியா என்றும் ஏற்காது!
நவுறு சிறுவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இடம் கிடையாது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அகதிச்சிறுவர்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின் மீண்டும் நவுறு தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நவுறு தீவிலுள்ள அகதிச்சிறுவர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே அமைச்சர் பீட்டர் டட்டன் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.
Read More »