சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சபாநாயகருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கிற்கு செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றியும் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இடம்பெறவுள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
யாழ் மாநகரசபையில் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு!
யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகரச் செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, யாழ் மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு செல்லும் பார்வையாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக ...
Read More »ஊடக சுதந்திரத்தில் சிறிலங்கா முன்னேற்றம்!
எல்லைகளற்ற நிருபர் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரம் தொடர்பான வருடாந்த சுட்டியில் சிறிலங்கா முன்னேற்றமடைந்துள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, கடந்த 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்து இலங்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாகபேணப்படும் நாடாக எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியா 138 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 146 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 139 ...
Read More »அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!
அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த ...
Read More »எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க மாட்டேன்!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமர்று சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பாதுகாப்பு ஒருங்கினைப்பு எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தான் ஒருபோதும் எதிர்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பிரதான எதிர்கட்சி தலைவர் பதவியை குமார வெல்கமவிற்கு வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் சபாநாயகருக்கு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் ...
Read More »சிறிலங்காவின் நீதித்துறை அமெரிக்க உதவியுடன் …..!
மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதித்துறையின் நேர்மையையும் ஆற்றலையும் மேம்படுத்தி நீதிமன்ற நிருவாகத்தை சிறப்பானதாக்குவதற்கான ஏற்பாடுகளில் நீதியமைச்சுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ( யூ.எஸ்.எயிட்) உதவிசெய்யவிருப்பதாக சட்டத்துறை மற்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது விடயத்தில் நீதியமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்ட உதவி ஆணைக்குழு, மாகாண சட்டத்தரணிகள் சங்கங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், முக்கியமான அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து யூ.எஸ்.எயிட் பணியாற்றும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More »சிட்னி – மெல்பேர்ன் 40 நிமிடங்களில் பயணம்?
சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய Hyperloop Transportation அதிவேக ரயில் சேவை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயில் சேவையை அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் நிர்மாணிப்பது குறித்த யோசனை மீண்டுமொரு தடவை அவுஸ்திரேலிய அரசின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவுள்ளது. சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களிலும் மெல்பேர்னுக்கும் கன்பராவுக்கும் இடையில் 23 நிமிடங்களிலும், கன்பராவுக்கும் சிட்னிக்கும் இடையில் 14 நிமிடங்களிலும், சிட்னிக்கும் குயீன்ஸ்லாந்துக்கும் இடையில் 37 நிமிடங்களிலும் பயணம் செய்யக்கூடிய வகையிலான இந்த அதிவேக ரயில் சேவையை அவுஸ்திரேலியாவில் நிர்மாணிப்பது ...
Read More »மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா!
வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை ...
Read More »அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையை பகிரங்கப்படுத்தவும்!
கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பகிங்கரப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அறிக்கை நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இதுவரையில் அறிக்கை குறித்து எந்தப் பேச்சையும் காணவில்லை என்று கூறியிருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிக்கை மூடிமறைக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தப் பிரயத்தனத்தையும் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அதைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
Read More »தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! -மகிந்த ராஜபக்ச
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் அடைந்துவிட ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது என்று குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பொன்றை பிரதமர் விக்கிரமசிங்க ...
Read More »