இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பொதுச்சபையில் உரையாற்றுகையில் ஜெரமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையில் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் காணப்பட்டதை விட நல்லநிலை காணப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் எனினும் இடம்பெற்ற தவறுகளிற்காக நீதி வழங்கப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என அமைச்சர் தெரிவித்துள்ளார் இதேவேளை பொதுச்சபையில் உரையாற்றியவேளை ஆசிய பசுவிக்கிற்கான பிரிட்டனின் அமைச்சர் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வுப் பணிகள்!
விடுதலைப் புலிகள் அமைப்பினர் வசமிருந்த, பெருந்தொகையான தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் ‘ஈழம் வங்கி’ குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தற்போது முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்துக்கு உரித்துடைய குறித்த இடத்தில், காவல் துறை உத்தரவைப் பெற்று, அகழ்வுப் ...
Read More »அலுகோசு பதவிக்கு பட்டதாரி!
அலுகோசு பதவி வெற்றிடத்துக்காக இன்று (02) இடம்பெற்ற, நேர்முகப்பரீட்சையில், பட்டதாரி ஒருவர் தோற்றியிருந்தாரென, சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு 39 பேர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், 19 பேரை தோற்றியிருந்தனரெனவும், இவர்கள் க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களென, சிறைச்சாலை தலைமையக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பதவிக்கான ஆகக் குறைந்த கல்வித் தகைமை, க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்திப்பெற்று, அவற்றில் 2 திறமைச் சித்திகளை கொண்டிருப்பதே ஆகும்.
Read More »ஏப்ரல் 15 அரச விடுமுறை!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த தினத்தை விடுமுறைய தினமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Read More »இரவில் ஒளிரும் அரிய வகை தேரை!
இரவில் ஒளிரும் அரிய வகை பூசணி தேரைகளை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பகலில் அந்த தேரையின் நிறம் பூசணிக்காயின் உள்ளே இருப்பது போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் (அல்ட்ரா வயலட்) அந்த தேரையின் உடலில் உள்ள புள்ளிகள் அடர் நீலத்திலும், மற்ற பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மின்னுகின்றன. குறுகிய ஒளி அலைகளை உள்வாங்கி பின் அவற்றை நீண்ட ஒளி அலையாக வெளியேற்றுவது அறிவியலில் ஒளிரும் தன்மை (புளோரசென்ட்) என்றழைக்கப்படுகிறது. இரவில் அல்லது ...
Read More »ஆஸ்திரேலிய தமிழ் அகதி புற்றுநோயால் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த சிவகுரு நவநீதராசா இரத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு தமிழ் ஏதிலிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜன் என நண்பர்களிடையே பரவலாக அறியப்படும் சிவகுரு நவநீதராசா, 2009 போருக்கு பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். அப்போது அவரை கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைத்த ஆஸ்திரேலிய அரசு, பின்னர் வில்லாவுட் தடுப்பு முகாமிற்கு மாற்றியது. அதன் பிறகு, ...
Read More »முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு!
முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் அதிபராக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தல், நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா குறிப்பிட்டார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் ...
Read More »சுமந்திரனின் முதலைக் கண்ணீர்!
நிறைவடைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளாரெனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி, சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டுமென்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோமெனவும் சுமந்திரன் கூறியமை, முதலைக் கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானதென்றும் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முடிந்தால், ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு – செலவுத் திட்ட ...
Read More »ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக தப்பமுயன்ற பிரித்தானியர்!
ஆஸ்திரேலியாவிலிருந்து கடல்வழியாக பப்பு நியூ கினியாவுக்கு தப்பமுயன்ற 57 வயது பிரித்தானியரான டேவிட் ஜேம்ஸ் ஜேக்சன் ஆஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபடகில் வில் அம்புடன் சுமார் 150 கி.மீ. பயணித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பப்பு நியூகினியாவுக்கு செல்ல 4 கி.மீ. மட்டுமே இருந்த சூழல் அவர் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார். மேற்கு ஆஸ்திரேலியாவில் போதை மருந்து தொடர்பான வழக்கில் இவர் மீது ஏற்கனவே கைதாணை இருந்துள்ளது. இவ்வாறான சூழலில் தப்பிய ஜாக்சன், ஆஸ்திரேலியாவில் அவர் பயன்படுத்திய காரில், “நான் புதன்கிழமைக்குள் வரவில்லை ...
Read More »மெக்சிகோ எல்லையை மூடுவேன்!
சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் ...
Read More »