இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பொதுச்சபையில் உரையாற்றுகையில் ஜெரமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் காணப்பட்டதை விட நல்லநிலை காணப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் இடம்பெற்ற தவறுகளிற்காக நீதி வழங்கப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதேவேளை பொதுச்சபையில் உரையாற்றியவேளை ஆசிய பசுவிக்கிற்கான பிரிட்டனின் அமைச்சர் மார்க்பீல்ட் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்திற்கு இலங்கை இணை அணுசரனை வழங்கியதை பாராட்டியுள்ளார்.
சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கும் அதேவேளை மிகவும் வேகமான முன்னேற்றம் அவசியம் எனவும் மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் குறித்த தங்கள் கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கையை கேட்டுக்கொள்வோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் உண்மையான முன்றேம் ஏற்படுவதை பார்ப்பதற்கு பிரிட்டன் ஆவலாக உள்ளது எனவும் மார்க்பீல்;ட் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal