அலுகோசு பதவி வெற்றிடத்துக்காக இன்று (02) இடம்பெற்ற, நேர்முகப்பரீட்சையில், பட்டதாரி ஒருவர் தோற்றியிருந்தாரென, சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேர்முகப்பரீட்சைக்கு 39 பேர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், 19 பேரை தோற்றியிருந்தனரெனவும், இவர்கள் க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களென, சிறைச்சாலை தலைமையக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பதவிக்கான ஆகக் குறைந்த கல்வித் தகைமை, க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்திப்பெற்று, அவற்றில் 2 திறமைச் சித்திகளை கொண்டிருப்பதே ஆகும்.
Eelamurasu Australia Online News Portal