ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலைமையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் பொது நிலைப்பாடொன்றினை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், அந்த ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் திறப்பு!
யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட அதிகாரிகள் சிலர் கலந்துகெண்டிருந்தனர்.இந்நிலையில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவது விமான சேவை இன்று முதல் ஆரம்பாமாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து விமான சேவைகள் இடம்பெறுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ஆகியோரின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு ...
Read More »யாழில் 17 ஆம் திகதி சர்வதேச விமான நிலையம் திறப்பு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.
Read More »அவுஸ்ரேலியாவில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு!
கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவில் மத்திய காவல் துறை படையின் துணை கமிஷனராக இருந்து வந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் ...
Read More »ஐ.நா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமியின் குரல்!
ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பல நாடுகளில் இருந்து ஆர்வலர்கள் உட்பட பல பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஆற்றிய உரை, உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. அவரை போன்றே 15 வயதையுடைய இந்திய தமிழ் சிறுமி ஒருவரும் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியிருந்தார். இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து போட்டியின் அடிப்படையில் பத்து மாணவ ...
Read More »சிவாஜிலிங்கத்தை தேர்தலில் இருந்து விலக கோரிக்கை! – சிறிகாந்தா
ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்தை கோருவதுடன், அமைப்பு விதிகளுக்கமைய ஏனைய நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ரெலோவின் தலைமை குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அது தொடர்பாக ஆராய்வதற்காக ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் நேற்று கூடியது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியினுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக கட்சியின் அனுமதியின்றி சுயேச்சை வேட்பாளராக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்து ...
Read More »யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் நியமனம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் ...
Read More »7 பேர் விடுதலையை எதிர்ப்பதா? காங்கிரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது. பஞ்சாபில் ...
Read More »பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம்!
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவு செய்யப்பட்டு பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ள போதும் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனங்களும், கொள்கைத்திட்ட வெளியீடுகளும் இடம்பெறாத நிலையில் அவசரமான தீர்மானங்களை கூட்டமைப்பு எடுக்காது எனச் சுட்டிக்காட்டிய சம்பந்தன் களமிறங்கிய வேட்பாளர்கள் யாரும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்குரிய உத்தியோக பூர்வமான அணுகுமுறைகளை ...
Read More »