தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் 2018 ஆம் ஆண்டு கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதி சந்தித்து பேசினர். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே நீடித்து வந்த பகைமை மறைந்து இணக்கமான சூழல் உருவானது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவுஸ்திரேலியா e-கல்வி அறக்கட்டளை ஆசிரியர் பற்றாக்குறை நீக்க உதவி!
இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு நிகர்நிலை ஆசிரியர்களை (online Teachers) வழங்குவதன் மூலம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவிலிருந்து செயற்படும் e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) அமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள இவ்வாறான பாடசாலைகளுக்கு Zoom செயலி மூலமும் மற்றும் இணைய வழிகளின் மூலமும் கற்பிக்கும் திட்டமொன்றையே e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) ஆரம்பித்துள்ளது. முக்கியமாக, ஆசிரியர்கள் தட்டுப்பாடான உயர்தர பாடங்களான பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் ஆகியவற்றுக்கும், வகுப்பு 6-11 வரையான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ...
Read More »ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள்: வார்னர் சொல்கிறார்
டி20 உலக கோப்பை ரத்து செய்யப்பட்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) அதற்கு பதிலாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் நிச்சயம் எங்களால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும். 20 ஓவர் உலக ...
Read More »ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து பல போராட்டங்கள்!
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கங்காரு பாய்ண்ட் ஹோட்டல் நோக்கி ஊர்வலம் செல்வதற்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடியதால் பிரிஸ்பேன் நகரின் முக்கிய சாலை முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்பிற்கு ...
Read More »பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த வாக்குறுதியிலிருந்து சிறிலங்கா பின்வாங்கியுள்ளது
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பதிலிருந்து சிறிலங்கா விலகிச்சென்றுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பான 2019 வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதியும் அவரது இடைக்கால அரசாங்கமும் எடுத்த முக்கியமான கொள்கை தீர்மானங்களில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்பதே என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உத்தேச புதிய சட்டமூலத்தையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி சலுகையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போதும் ...
Read More »லெமூறியா கண்டம் ஒன்று இருந்தது அதில் ஆதிக்குடிகள் தமிழர்கள்!
லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் என தமிழரசு கட்சியின் செயலாளரும் நாடாளமன்ற வேட்பாளருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார் இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை என் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை கண்டித்து ஊடகங்களுக்கு இன்று ...
Read More »சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் வேட்பாளர்கள்….!
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகளை கண்காணிபதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனை தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பது அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார் சமீபத்தில் ஆட்டநிர்ணய சதி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கருத்தில் எடுத்தால் அது ஒன்பது வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயம் என தெரிவித்துள்ள மஞ்சுளகஜநாயக்க ...
Read More »ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக கேபாராடிய கவுன்சிலர் கைது!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் Kangaroo Point ஹோட்டலில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சி கவுன்சிலர் Jonathan Sri கைது செய்யப்பட்டுள்ளார். குவின்ஸ்லாந்த் காவல்துறையினர் தன்னை கைது செய்ததில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நூற்றுக்கணக்கான மக்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், என்மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,” என Jonathan Sri குறிப்பிட்டுள்ளார். “நிலைமையை தணிக்க முயலாமல் படைப்பலத்தை மேலும் நிலைமை மோசமடையும் விதத்தில் காவல்துறையினர் பயன்படுத்தினர்,” என அவர் கூறியுள்ளார். கங்காரு ...
Read More »உறவுகளைத் தேடி போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்!
முல்லைத்தீவு -வள்ளிபுனம் பகுதியைச்சேர்ந்த தங்கவேல் சத்தியதேவி என்னும் தாயார் கடந்த இறுதியுத்த காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது ஐந்து உறவினர்களைத் தேடிவருகின்றார். இந் நிலையில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது தொடர் போராட்டத்தின் 1200ஆவது நாளான 20.06இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்த குறித்த சத்தியதேவி என்னும் தாயர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும்போது கதறிஅழுதபடியே மயங்கிவீழ்ந்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, எனது மருமகன் சின்னத்தம்பி – மகாலிங்கம், மகள் சிவாஜினி, பேரரப்பிள்ளைகளான மகிழினி, தமிழ்ஒளி, ...
Read More »அவுஸ்திரேலியாவில் பெற்றோரின் சடலங்களை நடுக்கடலில் கைவிட்டு நீந்தி கரை சேர்ந்த இளைஞர்
அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார். தொடர்ந்து இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர் ...
Read More »