ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.வின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மீளாய்வுக்காக அறிக்கை சமர்பித்துள்ள ஆமென்ஸ்டி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களும் அகதிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக ஆளாவதாக கவலைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களை குறிப்பாக படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி
அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More »அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள்!
அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதி சிங்கள மக்களின் அரசியலுடன் ஒப்பிடுவது மூடத்தனம். ...
Read More »32 நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்
கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்ளுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஓய்வூதியம் பெற தகுதி பெற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டிய கட்டாயமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகள் மற்றும் தேசிய பட்டியலில் புதிய உறுப்பினர்களாக பலர் தெரிவாகிய நிலையில், அவர்கள் 4 வருடங்களும் 8 மாதங்களுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளனர். எனவே கடந்த நாடாளுமன்றத்தை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்திய ...
Read More »சுரேன்ராகவனின் தேசியப்பட்டியல் ஆசனம் கண்டனத்திற்குரியது!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியலுக்கு நியமித்தவரை புறக்கணித்துவிட்டு சுரேன்ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது அதில் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாசவின் பெயர் முதலாவது என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் எங்களுடைய பரிந்துரையை புறக்கணித்து துரதிஸ்டவசமாக பொதுஜனபெரமுன சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து எங்களிடம் கேட்டிருக்கவேண்டும் அல்லது அறிவித்திருக்கவேண்டும் அவர்கள் அதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள ...
Read More »வடக்கின் ஆளுநராக மேஜர் ஜெனரல்……..!
வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார். இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழலில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக சிறிலங்கா ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.
Read More »உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், ...
Read More »சம்பந்தன் ஐயாவின் இராஜதந்திர நம்பிக்கை இன்னமும் காலம் கடந்துவிடவில்லையாம்!
தமிழரசுக் கட்சியால் தமிழருக்கான உரிமையை வென்றெடுக்க முடியும் என்பது செல்வாவின் நம்பிக்கையாக இருந்தது! விடுதலைப் போராட்டத்தால் தனி ஈழம் அமைக்க முடியும் என்பது பிரபாகரனது நம்பிக்கையாக இருந்தது! இராஜதந்திரத்தால் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இரா.சம்பந்தன் ஐயாவின் நம்பிக்கையாக இருந்தது. தற்போதைய தேர்தல் முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்காலிக பின்னடைவே அன்றி நிரந்தர பின்னடைவு இல்லை என, இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு ...
Read More »ஆஸ்திரேலியாவின் இறைமை நடவடிக்கை என்னென்ன?
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம், கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன. இவை Regional Processing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் ...
Read More »நடுக்கடலில் வைத்து சிறுவனை துன்புறுத்திய மூவர் கைது
மீ ன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஸ்ஸவில் வசிக்கும் 16 வயதுடைய மேற்படி சிறுவன், சில வாரங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ மீன்வள துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, ஆகஸ்ட் 12 ஆம் திகதி கரைக்குத் திரும்பினார். வீடு திரும்பியதும் அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, அந்த இளைஞன் தான் மீன்பிடி குழுவினரால் தாக்கப்பட்டதை வெளிப்படுத்தினான் சிறுவன் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை ...
Read More »