ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியலுக்கு நியமித்தவரை புறக்கணித்துவிட்டு சுரேன்ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது அதில் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாசவின் பெயர் முதலாவது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் எங்களுடைய பரிந்துரையை புறக்கணித்து துரதிஸ்டவசமாக பொதுஜனபெரமுன சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இது குறித்து எங்களிடம் கேட்டிருக்கவேண்டும் அல்லது அறிவித்திருக்கவேண்டும் அவர்கள் அதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் இது குறித்து அதிருப்தியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சுரேன் ராகவனின் நியமனம் என்பது ; இரு கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு முரணானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal