அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 41 ஆ ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன. தகவல் அறிந்து திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதிக்கு விரைந்து சென்ற அரசு ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு ...
Read More »ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்திருந்தனர்!
ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர். பின்னர், ஜூன் 1 அன்று ஆஸ்திரேலியா நோக்கி 11 வியாட்நாமியர்களுடன் கிளம்பிய படகு ஒரு சில நாட்களிலேயே பழுதடைய ஆளில்லா தீவான Jaco தீவில் கரை ஒதுங்கியிருக்கின்றனர். அங்கு வெட்டவெளியிலேயே இரண்டு இரவுகளை கழித்து இவர்களை, கிழக்கு திமோர் நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழலினால் தீவு நாடான கிழக்கு திமோரியிலேயே இவர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ...
Read More »என்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தான் மயக்கமடைந்தபோது அணிந்திருந்த ஆடைகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கூறுகையில், “ நான் ஒன்றில் மட்டும்தான் ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய ஆடைகள். நான் மயக்கமடைந்திருந்தபோது அணிந்திருந்த ஆடைகள் எனக்கு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ‘ஆகஸ்ட் 20 ஆம் தேதி அலெக்ஸி தங்கியிருந்த ஓட்டல் அறையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைத்தன. அதனை நாங்கள் ஜெர்மன் ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அதன் முடிவில் அலெக்ஸி நவால்னிக்கு ...
Read More »அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இணைந்து பாரிய கடற்படை ஒத்திகை
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்துமுன்னெடுக்கும் பாரிய கடற்படைஒத்திகைஇன்று இந்துசமுத்திரத்தின்கிழக்குபகுதியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த ஒத்திகையில் அவுஸ்திரேலியாவின் எச்எம்எஸ் ஹோபார்ட் நாசகாரி இந்தியாவின் அதிநவீன கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் சஹ்யாட்ரி,கர்முக் ஆகியன இணைந்துகொள்கின்றன. இரண்டு நாடுகளின் ஹெலிக்கொப்டர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுக்கவுள்ள அதேவேளை இந்தியா தனது அதநவீனஅதிவேக கடலோரா கண்காணி ப்பு விமானத்தை இந்தஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளது. இயங்கும் தன்மையை நோக்கமாக கொண்ட இந்த பயிற்சியின் போது அதநவீன தரையிலிருந்து வானில் காணப்படும் இலக்குகளை தாக்கும் ஆயுதங்களையும் பரிசோதனை செய்யவுள்ளதாக இந்திய கடற்படை ...
Read More »20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு
அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
Read More »முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புக்கூடு பெண் போராளியின் என அடையாளம்
பளை முகமாலையில் முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியில் அகழ்வு மேற்கொள்ள இராணுவத்தினர் நீதிமன்ற உத்தரவை பெற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று (23) அகழ்வு பணியின் போது இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி எலும்புக்கூடுகள், மற்றும் சீருடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆயுதங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை தோண்டி ஆராய நீதிமன்ற அனுமதியை ...
Read More »தமிழனே தமிழனுக்கு எப்போதும் எதிரியும் துரோகியும்……!
ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ஒரு நாடு ஒருசட்டம் என கூறுகின்றார் அப்படியானால் அவருக்கு முன் பதவியல் இருந்த ஜனாதிபதிகள் இரண்டு சட்டம் ஒருநாடு என்ற விதமாகவா செயல்பட்டனர் ஏனெனில் கடந்த காலங்களில் தியாகி திலீபனின் நினைவு இந்த நாட்டில் பல இடங்களில் சுதந்திரமாக இடம்பெற்றபோது ஏன் இவ்வருடம் நடத்தமுடியாமல் சட்டத்தால் தடுக்கப்படுகிறது என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான ...
Read More »இன்று நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்!
“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா. “தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ...
Read More »ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் வேறு நாடுகளுக்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!
நவுருத்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 10 அகதிகள் அமெரிக்கா மற்றும் நார்வேவில் மீள்குடியமர்த்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 அகதிகள் அமெரிக்காவிலும் 1 அகதி நார்வேயிலும் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். அதே சமயம், நவுருதீவில் மேலும் 160 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 ஆண்டுகள் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பப்பு நியூ கினியா தீவிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடங்களிலும் பல அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கா- ஆஸ்திரேலியா ...
Read More »