நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’. இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மீண்டும் விடுதலை புலிகள் தோன்றுவர்!- விஜித ஹேரத்
யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல . பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவில் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு முதலமைச்சர் மற்றும் ...
Read More »நாட்டை சீரழிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டும்!
யுத்தத்தை காரணம் காட்டியே வடக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் அரசியலை மேற்கொள்கின்றனர் என குற்றம் சுமத்தும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் வகமுல்ல உதித்த தேரர் நாட்டை சீரழிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டுமென தெரிவித்தார். தேசிய பிக்குகள் தினத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி நினைவுகூறவிருக்கும் புத்தசாசன பிக்குகள் அத்தினத்தை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்த ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று புத்தசாசன கலாசார மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது ...
Read More »காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும்! – வித்தார்த்
ஜோதிகாவிற்கு கணவராக காற்றின் மொழி படத்தில் நடித்திருக்கும் வித்தார்த், இந்த படம் எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். 36 வயதினிலே, மகளீர் மட்டும், நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் திகதி திரைக்கு வருகிறது. மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் ...
Read More »ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது!
ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா காவல் துறை முச்சக்கரவண்டி ஒன்றை ...
Read More »அவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவு!
அவுஸ்ரேலிய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர்கள் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் மல்கம் டர்ன்புல் போட்டியிட தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை அமைச்சரும், முன்னாள் ...
Read More »கிம்மை மீண்டும் சந்திப்பேன்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் திகதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டு வடகொரியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிலையில் டிரம்ப், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி ...
Read More »வெர்டிகல் மவுஸ் (Vertical Mouse)
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மவுஸில் கையை ஒரே கோணத்தில் பயன்படுத்துகிறோம். நாம் தினசரி மவுஸை பயன்படுத்தி வந்தால் கை வலி ஏற்படும். இதுவே வெர்டிகல் மவுஸ் பயன்படுத்துவதன் மூலம் கை நடுநிலையாக இருக்கும். மவுஸில் நாம் கைகளை வைத்திருக்கும் முறையை வைத்து இந்த வெர்டிகள் மவுஸ் வடி வமைக்கப்பட்டிருக்கும்.
Read More »மஹிந்தவின் செயல்களுக்கு வயதுக் கோளாரே காரணம்!
கனவில் மட்டுமே மஹிந்த ராஜகன்ஷ ஜனாதிபதியாக முடியுமெனவும் அவரின் குதூகலமான செயல்களுக்கு வயதுக் கோளாரே காரணமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக் ஷவினால் முடியாது. தோல்வி அடைந்த பின்னர் வீடு செல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்தார். அதன்பின்னர் பிரதமராக முயற்சித்தார். அது முடியாது போனமையினால் எதிர்க்கட்சி தலைவராக முற்பட்டார். தற்போது மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவு காண்கின்றார். இவ்வாறான செயல்கள் அவருக்கு குதூகலமானவையாகும். அது வயது கோளாறாராகும். 70 வயதை ...
Read More »ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்கா பயணம்!
இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவிற்கு சென்றுள்ளார்.. சிறிலங்கா சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த சிறிலங்காவுக்கான விஜயமானது ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் முதலாவது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »
Eelamurasu Australia Online News Portal