ரஞ்சன் ராமநாயக்க தான் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன்ராமநாயக்க சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன எனினும் முகநூல் பதிவொன்றில் அவர் இதனை நிராகரித்துள்ளார்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இந்து கடவுளை சித்தரித்து அவுஸ்திரேலியாவில் வெளியான கேலிச்சித்திரம்
அவுஸ்திரேலியாவில் நாளிதழொன்றில் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும், இது தொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்நாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறித்த கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் அமைந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன்,கேலிச்சித்திரம் தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலாச்சார சமூகங்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும், ...
Read More »கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி
உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது. அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு மரணமானார். வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறிய வருவதாவது; உயிரிழந்த நபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வலிப்பு வந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். சக ...
Read More »சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொன்றிருக்க வேண்டுமா?
சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் விடுவிக்கும் போது ஏன் அதனை சரத் பொன்சேகா எதிர்க்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பிய நிலையில், அப்படியாயின் அவர்கள் அனைவரையும் கொன்றிருக்க வேண்டும் என்பதா? சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்று சரத் பொன்சேகா பதில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போது, மிருசுவில் கொலைச் சம்பவம் தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவின் ...
Read More »ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
மாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவில் ஏழு குழந்தைகள் உள்ளன என்று டாக்டர்கள் கூறிய நிலையில், 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை. அபூர்வமாக நான்கு குழந்தைகளுக்கு மேலும் உருவாகும் நிகழ்வும் நடந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த பெண்ணிற்கு ஒரு கருவில் 9 குழந்தைகள் உருவாகி, தற்போது அறுவை சிகிச்சை மூலம் 9 குழந்தைகளையும் ...
Read More »‘ஆஸி. பிரதமரே! உங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது’
ஐபிஎல் டி20 தொடரில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வந்த ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாடர், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைப் பார்த்து, பயோ-பபுளில் இருந்து விலகி மாலத்தீவு சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமகன்கள் யாரும் மே 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது என பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார். விமானச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்துதானே விமானங்கள் வரக்கூடாது, ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது, மாலத்தீவிலிருந்து வரலாமே என்பதால், மைக்கேல் ஸ்லாடர் மாலத்தீவு சென்றதாக ஆஸ்திேரலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
Read More »அமேசான் நில சீர்திருத்த சட்டமூலம் குறித்து இங்கிலாந்து பிரேஸிலுக்கு எச்சரிக்கை
முன்மொழியப்பட்டுள்ள நில சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 40 இங்கிலாந்து உணவு வணிகங்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குழுவின் ஒரு திறந்த கடிதம், பொது நிலத்தின் தனியார் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கக்கூடிய ஒரு சட்டமூலத்தை நிராகரிக்க பிரேஸிலின் சட்டமன்றத்தை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சட்டமூலம் அமேசானில் காடழிப்பை துரிதப்படுத்தக்கூடும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்புகளை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரேஸில் உறுதியளித்த சில மாதங்களிலேயே இந்த சட்டமூலம் அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு செனட்டில் புதன் அல்லது வியாழக்கிழமைக்கு பின்னர் நடத்தப்படும் என்று ...
Read More »ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. மக்களின் கருத்துச்சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ...
Read More »கொடிகாமம் பகுதியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டன
யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ ...
Read More »சட்டமன்ற திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற திமுக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்று இரவு 7 மணியளவில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ...
Read More »