அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வர்த்தகர்களுக்காக தினமும் வரிச் சலுகை வழங்க முடியாது!
வர்த்தகர்களுக்காக தினமும் வரிச்சலுகை வழங்க முடியாதென, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று (12) நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் என்றார். அத்துடன், புதிய வர்த்தக செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Read More »மன்னார் மனித புதை குழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?
மன்னார் மனித புதை குழியில் மீட்க்கப்பட்ட மனித எழும்புக் கூடுகள் யாழ்பாண மன்னனால் கொல்லப்பட்டவர்கன் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். 1550 ஆம் ஆண்டு காலப்பகுதியில் “கிறிஸ்தவ மதத்தை தழுவியமைக்காக போர்த்துக்கேயர் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவ்வாறு யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனால் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடமே மன்னார் மனிதப் புதைகுழி…” என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் ரி.ஜி.குலதுங்க தெரிவித்துள்ளார். பிரபல சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »அவுஸ்திரேலியாவில் இளைஞனைத் தாக்கிய கங்காரு!-காணொளி
பாராசூட் மூலம் தரையிறங்கியவரை கங்காரு தாக்கி காயப்படுத்திய காணொளி வெளியாகி உள்ளது. அவுஸ்திரேலியாவில் கான்பெரா அருகே உள்ள வனப்பகுதியில், பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இறங்கு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கங்காரு ஒன்று வேகமாக வந்து குறித்த இளைஞனை தாக்கியுள்ளது. முன்பக்க கால்களால் தாக்கியதில் இளைஞரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More »அவுஸ்திரேலியாவில் திமிங்கலத்தின் வாய்க்குள் மாட்டிக் கொண்ட நபர்!
அவுஸ்திரேலியாவுக்கருகே ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக குழு ஒன்று கடலுக்கு சென்றிருந்த போது ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர் திமிங்கலத்தின் வாயில் சிக்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரரான Rainer Schimpf (51) தனது குழுவினருடன் கேப் டவுனுக்கு கிழக்காக உள்ள கடல் பகுதியில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். இரு குழுக்களாகப் பிரிந்து அங்கு நீந்திக்கொண்டிருந்த மீன்களையும், பறந்து கொண்டிருந்த பறவைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது இடுப்பை ஏதோ பலமாக அழுத்துவதை உணர்ந்தார் Rainer. சில வினாடிகளுக்கு பிறகுதான் தான் ஒரு ...
Read More »ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட வவுனியா பிரதேசசபை தலைவர்!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவருக்கும் ஊடகவியலாளருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஓமந்தையில் மதுபானசாலையை மூடுமாறு கோரி நேற்று மாலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், மதுபானசாலை உரிமையாளருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரதேசசபையின் தலைவர் மதுபானசாலையை நோக்கி சென்று மதுபானசாலைக்குள் தனித்து இரகசியமாக உரிமையாளரை சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களையும் செல்லுமாறு கோரியிருந்தனர். ஊடகவியலாளர்களும் செய்தியை சேகரிக்க சென்றிருந்த போது பிரதேசசபையின் தலைவர் மதுபானசாலைக்குள் சென்றபோது ஊடகவியலாளர்கள் படம் எடுப்பதை பிரதேசசபை தலைவர் அவதானித்துள்ளார். அப்போது தான் ...
Read More »வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார்! அம்பலப்படுத்திய செயற்கைகோள் படங்கள்!
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருகிறது என்பதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்து உலக நாடுகளை அதிர வைத்தது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் தொடர் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத திட்டங்களை அந்த நாடு நடத்தியது. இது அமெரிக்காவுக்கு சவாலாக அமைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ...
Read More »பாகிஸ்தான் போரை விரும்பவில்லை- இம்ரான்கான்
தனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று இம்ரான்கான் பேசியுள்ளார். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள சாச்ரோ நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- தனது மண்ணிலோ, அல்லது உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. தற்போது இருப்பது புதிய பாகிஸ்தான். எங்கள் நாட்டில் முதலீட்டையே நாங்கள் விரும்புகிறோம். நமது புதிய பாகிஸ்தான் வளமுடனும், ஸ்திரதன்மையுடனும், அமைதியுடனும் திகழ ...
Read More »இராணுவ உயர் அதிகாரி வீட்டில் விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மீட்பு!
விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் உள்ளிட்ட 5.81 மில்லி மீட்டர்களைக் கொண்ட 273 ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றிய காவல் துறை,இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.ஹ பதுளை – ரிதிமாலியத்தை காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து காவல் துறை நேற்று ரிதிமாலியத்தை காவல் துறை பிரிவைச் சேர்ந்த குருவிதென்னை என்ற இடத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரது வீட்டைச் சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். இத் தேடுதலின் போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றை பரிசோதனை செய்த ...
Read More »மன்னார் மனிதப் புதைகுழி! முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானம்!
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை அது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். இவ்விடையம் தொடர்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது.கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் ரி. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் ...
Read More »