கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயதில் உலகப் புகழ்பெற்றவர் (most famous teenager) என்ற பட்டத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை “பத்தாண்டு கால மதிப்பீடு” (Decade in Review) என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (2015) ஆகியவற்றை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இஸ்ரேல்: லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு அபார வெற்றி!
இஸ்ரேல் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாமல் நாடாளுமன்றத்துக்கு மறுதேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றி பெற்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது. நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ...
Read More »‘மஹிந்த சிந்தனை’ சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது!
உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் என்றாலும் மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் ...
Read More »வெளியாகியது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளை பார்வையிட முடியும்.
Read More »முல்லைத்தீவில் தெளிவாக தெரிந்த சூரிய கிரகணம்!
இன்று காலை இடம்பெற்ற சூரிய கிரகணத்தை முல்லைத்தீவில் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததாக இலங்கை கோளரங்கத்தின் (Sri lanka Planetarium) பணிப்பாளர் திருமதி அருணா பிரபா பெரேரா தெரிவித்துள்ளார். இதனை அவதானிப்பதற்காக முல்லைத்தீவில் தமது பிரிவு முகாமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை இன்று தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததுடன் சீரான காலநிலையும் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை இந்த பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More »சவால்கள் ஏற்பட்டாலும் சபாநாயகர் பின்வாங்கப்போவதில்லை!
சம காலத்திலும் எதிர்காலத்திலும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவும் ஜனநாயக ரீதியான நாடாளுமன்ற முறைமைக்குள் முக்கியமான சம்பிரதாயங்களுக்குள் அடங்குகின்ற சலுகைகளை பாதுகாப்பதற்கான கடமையை நிறைவேற்றுவதில் , எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திப்படுத்துவதிலிருந்து சபாநாயகர் கருஜய சூரிய எந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டமை, நலன் விசாரித்தமை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று ...
Read More »இந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், இங்கிலாநது 4-வது இடத்திலும் இருப்பதை என்னால் ஏற்க முடியாது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர்களின் தரவரிசை குப்பை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
Read More »கடவுள் அனைவரையும் நேசிக்கிறார் – நத்தார் தின திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ்
உலகின் 1.5 பில்லியன் கிறிஸ்தவ சகோதரர்களுடன் இணைந்து அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகின்றனர். இதே வேளை உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நத்தார் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விழா திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது தமது ஆசீர்வாத பேருறையில் திருத்தந்தை, “கடவுள் அனைவரையும் நேசிக்கிறார், நம்மில் மிக மோசமானவர்களையும் கூட நேசிக்கிறார்.” என தெரிவித்தார். “நீங்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கலாம், நீங்கள் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ...
Read More »நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை!
இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார். கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள். கிரகணம் என்பது என்ன? கிரகணம் என்பது நிழல்தான். நிழலின் விந்தையான விளையாட்டே கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் ...
Read More »இராணுவ சிப்பாயின் கழுத்து துப்பாக்கி கொள்ளை!
வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும் பறித்து செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள 7 ஆவது சிங்க றெயிமென்ட் இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் இன்று காலை தனது பணி முடிந்ததுதும் இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார். இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தில் எம்.ரத்நாயக்க ...
Read More »