இனந்தெரியாத நபர்கள் கிட்டுபூங்காவின் முகப்பிற்கு தீ வைத்ததால் அது எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிட்டுப்பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிவதை கண்டதும் தீயணைப்பு பிரிவினருக்கு உடனடியாக தாங்கள் அறிவித்த போதிலும் அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு வரவில்லை இதனால் முகப்பு தீக்கிரையாவதை தடுக்க முடியவில்லை என முகப்பு தீப்பற்றி எரிவதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது
கால்வாயின் கரைகளில் மோதி தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் ...
Read More »சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு இன்றியமையாதது!
நீதிபதிகளை பதவி விலக்கும் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் அரசியலமைப்பின் ; 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் நியமனம் மற்றும் அவர்களை பதவி விலக்குதல் ஆகியவற்றின் போது உரிய சட்டதிட்டங்களும் வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 2021/2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கும் நிகழ்வும் முதலாவது கூட்டமும் நேற்று சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...
Read More »சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு
சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. 2-வது அலை மற்றும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த ...
Read More »தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மனி கைவிடவேண்டும் – கஜேந்திரகுமார்
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மார்ச் 30 ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற ...
Read More »ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் தீயுடன் சங்கமம்
ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (26) உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இவர் உயிரிழந்தார். இன்று (27) இறுதி நிகழ்வு பொன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது அவரது திருவுடல் .திருவடிநிலையில் தீயுடன் சங்கமமாகியது. கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் படையினரின் வாகனம் இவரை மோதியது. ...
Read More »தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்!
உலகம் வெட்கித்தலைகுனியக்கூடிய அளவுக்கு இலங்கையில் ஒரு பாரிய இன அழிப்பு நடைபெற்றது, இந்த உண்மைகளை தேசிய ரீதியில் கண்டறிய முடியாது எனவே இவ்விடயத்தில் சர்வதேசம் ; தீவிரமாக ஈடுபட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விடயங்களை கொண்டு செல்லப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார் ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலைமை வகித்திருந்தாலும் இந்தியா இம்முறை கனதியான செய்தியை இலங்கைக்கு சொல்லியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ...
Read More »யாழ். புத்தூரில் அகழ்வாரய்ச்சி……
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில் ; இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »முடக்கப்படுகிறது யாழ். மாநகரின் மத்திய பகுதி
கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கும் காரணத்தால் யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா கட்டுபாட்டு செயலணி அறிவித்துள்ளது இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், அதனால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும். யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் ...
Read More »மியான்மரில் 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம்
மியான்மரில் பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் குழு கூறுகிறது. பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு ...
Read More »