கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கும் காரணத்தால் யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா கட்டுபாட்டு செயலணி அறிவித்துள்ளது
இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,
அதனால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.
யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.
உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர். வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவிட் -19 நோய்த் தொற்று நிலமை தொடர்பில் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தலைமையில் அவசர கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.