எதிர்வரும் ஜூன், ஜூலை மாதத்திற்குள்ளாக மாகாண சபைத் தேர்தலை நடாத்த அரசு உத்தேசித்திருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு வரும் விடயம் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியும் நாங்களும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், எந்தக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். 18 மாதங்களுக்கு மேலாக மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரிகளிடம் நிர்வாகத்தினை முழுமையாக ஒப்படைக்க முடியாது, மக்களுடைய நிர்வாகத்தினை மக்கள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணக்கப்பாட்டில் முதலமைச்சர் தெரிவுசெய்யப்படுவார்!
“கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது வேறு எந்தக் கட்சியோ தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பின்னரும் கூட்டாட்சிதான் இங்கு நடக்கும். தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவுசெய்யப்படுவார்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். அதேவேளை, அரசியல் தீர்வு முயற்சியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா ...
Read More »போர்க்குற்றங்களை விசாரிக்க அவுஸ்ரேலியா வலியுத்தல்!
கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படுவதில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எந்த தயக்குமும் இல்லை எனக்கூறியுள்ள ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப், அதே சமயம், உள்நாட்டு போரின் போது இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். “தற்போதைய சூழலில், இலங்கை முப்படையினருடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையை கொண்டிருக்கிறோம். போர் முடிந்த 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு ...
Read More »அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழில் சட்டரீதியாக்கப்படவுள்ளதா?
தெற்கு அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிப்பதற்கான சட்டத்திருந்தங்களை கொண்டுவருவதுதொடர்பான பேச்சுக்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூத்த பாலியல் தொழிலாளர்கள் இருவர் அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு சென்று கிறீன் கட்சியினரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பெண் பாலியல் தொழிலாளர்கள் பல வருடங்களாக பாலியல் தொழிலை மேற்கொண்டவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பணிபுரிந்த துறையிலுள்ளவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக பங்களித்துவருகிறார்கள். அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கிறீன் கட்சியினரை சந்தித்து அந்த மாநிலத்தில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதில் ...
Read More »மன்னார் கடற்பரப்பில் எரிவாயு, எண்ணைப் படிமங்கள்!
மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பரல் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான டொராடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். இதன் மூலம், 350 ...
Read More »தன்னிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் இருப்பதாக்க கூறும் பொன்சேகாவும் போர்க் குற்றவாளிதான் !
தன்னிடம் போர்க்குற்ற ஆதரங்கள் இருப்பதாகக்க கூறிவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்த அந்த ஆதாரங்களை வெளிப்படுத்தவோ போர்க்குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பொன்சேகா தயாராக இருக்கமாட்டார் என்றும் அவர் தனது அரசியலுக்காக மட்டுமே இவ்வாறு கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (29) கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர், ...
Read More »லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத அகதிகள் மீட்பு!
லிபியாவின் மேற்கு கடற்பகுதியில் ரப்பர் படகில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட 117 சட்டவிரோத அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர். லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்து கொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இதேபோல் வன்முறை, உள்நாட்டுப் போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ...
Read More »யாழில் கொள்ளையிலீடுபட்டு வந்த இரு இந்தியர்கள் கைது !
பொருள் விற்பனையாளர் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகளை ஊர்காவற்றுறை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். ஊர்காவற்றுறைப்காவல் துறை பிரிவிற்குட்பட்ட கரம்பன், நாரந்தனைப் பகுதிகளில் அண்மைக்காலமாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக காவல் துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது. இதையடுத்து மண்டைதீவு காவல் துறை சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை காவல் துறையினர் பலப்படுத்தினர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற சந்தேகநபர்கள் இருவரும், வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி ...
Read More »யாழ். மாவட்டத்தில் 50 மாணவிகளுக்கு “ 9 ஏ ” சித்தி!
கல்வித் பொதுத்தர சாதாரண பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று வேம்படி மகளீர் கல்லூரி முதலிடத்தை பிடித்துக் கொண்டது. பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியது. அந்த முடிவுகளின் படி யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தியையும், 42 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக் கொண்டனர். கொக்குவில் இந்து கல்லூரியில் 8 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும்,13 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் 5 ...
Read More »சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகை- விமானங்கள் தரையிறக்கம்!
சிட்னி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் திடீரென தரையிறக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை, கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கட்டுப்பாட்டு கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் பணிகள், மெல்போர்னில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. வெளியில் இருந்து வந்த ...
Read More »