அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் மொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு செலுத்தி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 44 வயதான பெர்னாண்டோ மன்ரிக். கடந்த 2016 ஆம் ஆண்டு அல்டோபர் மாதம் இவரது மனைவி மரியா லூட்ஸ், பிள்ளைகள் எலிசா மற்றும் மார்ட்டின் என நால்வரும் பரிதாபமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் மன்ரிக் என்பவரே தமது மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு தப்பிக்க ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கைக்குண்டு, வாள்களுடன் இருவர் கைது!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல் துறையினர் தெரிவித்தனர். மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் ஐயங்கேணி பிரதேசத்தில் வைத்து ஒரு கைக்குண்டு 4 வாள்களுடன் இரு இளைஞர்களை கைதுசெய்து ஏறாவூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர் . இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விபுலானந்தபுரம் ...
Read More »அமெரிக்க குடியுரிமை விவகாரம்; உறுதிப்படுத்தியது எதிர்க்கட்சி!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா போட்டியிடுவார் என்கிற அச்சத்தில் ஐ.தே.கவின் அமைச்சர்கள் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து கோட்டாவுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்துவருவதாகவும் இதன்போது விமல் ...
Read More »அமெரிக்க உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா!
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார். இவர் டிரம்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்த நிலையில், ...
Read More »இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் !
இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் மந்திரி கூறினார். காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந் திகதி மத்திய துணை ராணுவப்படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் திகதி, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தன. இதற்கு பதிலடி தருவதற்காக, மறுநாள், இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. ...
Read More »காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாலையில் உயிரிழந்தார்!
யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(06) யாழ்.மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது. குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அன்று மாலை நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மாலை வீடு ...
Read More »மின்சார நெருக்கடிக்கு விசேட நடவடிக்கை !
மின்சார நெருக்கடியினை தீர்க்க அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி தனியார் துறையினரிடமிருந்து 500 மெகாவொட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்து, நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »நீராவியடியில் பிள்ளையார் ஆலயத்தை தவிர வேற்று மத அடையாளங்கள் இருக்கவில்லை!
முல்லைத்தீவு – நாயாறு நீராவியடி பகுதியில் கடந்த காலங்களில் பிள்ளையார் ஆலயம் மாத்திரம்தான் இருந்ததெனவும், வேறு எந்தவித மத அடையாளங்களும் இருக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் காவல் துறை விசாரணையில் தான் திட்டவட்டமாக தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடிக்கல் நாட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியதாக, நாயற்றில் தங்கியிருக்கும் பௌத்த பிக்கு,காவல் துறையிடம் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அதற்கமைய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விசாரணை செய்வதற்காக காவல் துறை நிலையம் வருமாறு, முல்லைத்தீவு காவல் துறையினர் அழைத்திருந்தனர். குறித்த ...
Read More »வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா அதிகாரிகள் விஜயம்!
வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா. அதிகாரிகள் இன்று (07.04) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற ஐ.நா அதிகாரிகள் 5 பேர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடனும் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 1 மணி நேரம் சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் குறித்த ஐ. நா அதிகாரிகள் குழு அங்கிருந்து சென்றிருந்தது. குறித்த விஜயம் தொடர்பாக ஐ. நா அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத ஐ. நா. அதிகாரிகள் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் ...
Read More »பாகிஸ்தான் பிரதமர் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு ...
Read More »