மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் ஐயங்கேணி பிரதேசத்தில் வைத்து ஒரு கைக்குண்டு 4 வாள்களுடன் இரு இளைஞர்களை கைதுசெய்து ஏறாவூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர் .
இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விபுலானந்தபுரம் ஐயங்கேணியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரிடமிருந்து ஒரு கைக்குண்டு, ஒரு வாள், மற்றும் இரும்பு கம்பிகள் மீட்கப்பட்டது அவ்வாறே பாரதிபுரத்தைச் சோந்த 22 வயதுடைய இளைஞரிடமிருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை ஏறாவூர் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal