அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 3,36,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். கண்களுக்குத் தெரிகிற எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாத எதிரிகள்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்வது உண்டு. அது கொரோனா வைரசை பொறுத்தமட்டில் 100 சதவீதம் உண்மை. அதனால்தான் இந்த உலகமே அதிர்ந்து போய் கிடக்கிறது. இந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத பேய், தாக்க வருவதற்கு முன் தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறது. இந்த ...
Read More »செல்வம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம்!
யுத்தத்தின் போது ‘செல்’ துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் ...
Read More »இலங்கையில் 12 பகுதிகள் முற்றாக முடக்கம் ! அதிக கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ; இந் நிலையில் 9 சிறார்கள் உட்பட 140 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் ...
Read More »அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..!”
“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..”: கணவரின் வார்த்தையை கேட்ட அடுத்த நொடியே பிரிந்த தாதியின் உயிர் உலகின் பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாக வலம் வந்து கொண்டிருக்கிறது கொரோனா. பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளின் தாயான தாதியொருவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்து தன்னுயிரை நீத்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 16 ஆண்டுகள் தாதியாக பணி புரிந்த அரீமா என்ற பெண்ணொருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்காக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ...
Read More »இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390க்கு அழையுங்கள்!
இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390 என்ற இலக்கத்துக்கு, அழைக்குமாறும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய பின்னர், நோய்அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், தேவையேற்படின் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு 1990 அம்பியூலன்ஸ் வசதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு
19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
Read More »சிறிலங்காவில் 2691 கைதிகள் விடுப்பு!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ...
Read More »கொரோனா அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் தாக்கம் செலுத்தக்கூடுமா?
உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா உருவாக்கியுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் தாக்கம் செலுத்தக்கூடும் எனப்படுகின்றது. கொரோனா அச்சம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரின் குடியேற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சில ஆஸ்திரேலியர்கள் வரவேற்கக்கூடும் என்றும் ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ...
Read More »