19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal