Tag Archives: ஆசிரியர்தெரிவு

76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாகக் ...

Read More »

பௌத்த மயமாகும் வட்டுவாகல்

சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் (25) நேற்று முன்தினம்  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து ...

Read More »

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார். இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித ...

Read More »

5 லட்சம் கடந்த உயிரிழப்பு – வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் 3 போர்களில் பலியானோர் எண்ணிக்கையைவிட அதிகமாகும். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் 4 லட்சத்து ...

Read More »

வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து பேச்சு

சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையில் இன்று(24) நடைபெற்ற கலந்தரையாடலின்போதே, இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இச்சந்திப்பு பலனளிக்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், தொழில்நுட்ப அறிவு குறித்தும் இருநாட்டு தலைவர்கள் கருத்துகளை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் விவசாய பொருளாதார செயற்பாடுகள் சிறிலங்காவுடன் ...

Read More »

அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக முகநூல் நிறுவனம் அறிவிப்பு

ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக முகநூல்  நிறுவனம் அறிவித்துள்ளது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு முகநூல் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்ரேலிய அரசின் விதிகளுக்கு முகநூல் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால், பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனிமுகநூலில்  வெளியாகும் என அதன் அவுஸ்ரேலிய ...

Read More »

சீன அதிபர் ஜின்பிங் இந்தியா பயணம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் இந்தியாவை நாங்கள் ஆதரிக்கிறோம். தகவல் தொடர்பு மற்றும் ...

Read More »

அவசர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அம்பியுலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Read More »

தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றியவர் கைது!

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஊடகங்களில் வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை காவலர் துறையால் கைது செய்துள்ளனர். வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே தலைவர் பிரபாகரனின் காணொளியொன்றை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி யமை ...

Read More »

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று முதலில் ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. பிறகு சிறுநீரகத்தையும் இந்த வைரஸ் மிக வேகமாக தாக்கும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒரு ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு ...

Read More »