தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஊடகங்களில் வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை காவலர் துறையால் கைது செய்துள்ளனர்.
வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே தலைவர் பிரபாகரனின் காணொளியொன்றை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி யமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் பின்னர் ஹட்டனில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த நபரின் கைத்தொலைபேசியயை சோதனையிட்டதில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல்வேறு செய்திகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வத்தளைப் பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.