Tag Archives: ஆசிரியர்தெரிவு

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் ...

Read More »

மட்டக்களப்பிலும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு ஒறுப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தால் இன்று(புதன்கிழமை) காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை லண்டனில் 27ஆம் ...

Read More »

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற தமிழ்ச்சிறுமி

தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் நாட்டிலுள்ள வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப் போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்ரியாவின் தலைநகரில் நடத்தியது. இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் விதிமுறையாகும்.இதில், ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு எனும் ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஓவியமொன்றை வரைந்து பரிசு பெற்றார். ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை தனது ஓவியத் திறமை மூலம் வெளிப்படுத்தி முதலாம் பரிசினைத் தனதாக்கினார் அபிர்சனா.

Read More »

கிளி/வட்டக்கச்சியில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை முயற்சி; தாயார் காப்பாற்றப்பட்டார்

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதி யில் வசிக்கும் தாயார் ஒருவர்  கும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற போதும் தாயார் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார். இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள் தனது பிள்ளைகளைப் போட்ட  தாயார் தானும் கிணற்றில் குதித்துள்ளார். தாயார் கிணற்றில் குதிப்பதை அவதானித்த சிலர் உடன் கிணற்றில் பாய்ந்து ப்பாற்ற முயன்றதில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் மூவல் இரண்டு ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா இன்று காலை காலமானர்.  கடந்த 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊட கவியலாளரான இவர் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தவராவார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை தனது 85 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிக்கிரியைகள் நாளைய ...

Read More »

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ்

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 244 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள். சிறைச்சாலைகளிலிருந்து ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையினால் நிகழ்ந்த உயிரிழப்பு

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின் படகுக் கொள்கையினால் பல ஆண்டுகள் மனுஸ்தீவிலும் நவுருத்தீவிலும் உள்ள தடுப்பில் இருக்க வேண்டி வந்தது. நவுருத்தீவில் இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட இதயப்பிரச்னை இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட போதிலும் அவரது உயிரைப் பறித்து விட்டது. ஆம், அவர் தனது 39வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளே இதயப்பிரச்னையில் உயிரிழந்து ...

Read More »

இலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 909 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 878 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹர சிறைச்சாலையில் 827 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 450 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ,இது வரையில் கொரோனா தொற்றில் இருந்து ...

Read More »

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என ...

Read More »

தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு தடை

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி  காவல் துறை  மற்றும் வனவள திணைக்களத்தினரை அனுப்பி வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை (27)இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை ...

Read More »