Tag Archives: ஆசிரியர்தெரிவு

நாடுகடத்தல் அபாயம்! நடேசலிங்கம் குடும்பம் தொடர்பில் மீள்பரிசீலனை?

நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நடேசலிங்கம், ப்ரியா குடும்ப விடயத்தை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அவுஸ்திரேலிய தொழில் கட்சியின் தலைவரான பில் சோட்டன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக தான் தெரிவானால், உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம், ப்ரியா குடும்பத்தினர், தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தால் கடந்த தினம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை ...

Read More »

“நல்லூர் ஆலயத்தை தாக்க திட்டம்…”- அநாமதேய கடிதம்

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்த அநாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் காவல் துறையின்  கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட குறித்த அநாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ஆம் திகதி தாக்கவுள்ளனர்” என குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இதுவரை 17 பேரை பலியெடுத்த நோய்!

அவுஸ்திரேலியாவில் பருவ கால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலில் (flu) இதுவரை பலர் உ யிரிழந்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேரை இந்த வைரஸ் பலியெடுத்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வைரஸ் காய்ச்சல் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்தக்காலப்பகுதியில் 1328. ஆனால், இந்த வருடம் இதுவரை 12 ஆயிரத்து 339 பேர் இந்தக்காய்ச்சலால் ...

Read More »

தற்கொலை குண்டுதாரிகளின் 17 பாதுகாப்பான வீடுகள் முற்றுகை!

இலங்கை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல் துறை இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் கொழும்பில் மட்டும் 3 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் காவல் துறை விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர். அந்தவகையில் தற்கொலை குண்டு ...

Read More »

சிரியாவில் ஐ.எஸ் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்!

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து  பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும்  விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.   அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன. அதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் ...

Read More »

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை!

நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார். நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார். மற்ற 2 ...

Read More »

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி!

டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய ...

Read More »

தாக்குதலை தடுக்க பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை!

ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்த வேளையிலேயே, தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  தெரிவித்துள்ளார். நேற்று நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், விடுதலைப்புலிகள் கூட பயன்படுத்தவில்லை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் சிறிலங்கா  இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில், இவ்வாறான குண்டு இருந்துள்ளமை தொடர்பில், விசாரணைகளின் போதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் என்றும் இராணுவ ...

Read More »

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 காவல் துறையினர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலம் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் உள்ள தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள் கட்டிடங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 4 காவல் துறையினர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து ராணுவத்தினரும் காவல் ...

Read More »