Tag Archives: ஆசிரியர்தெரிவு

நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன்!-நளினி

வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவன் முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் தமிழக ஆளுநருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 7 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உணவு சாப்பிட மறுத்துவிட்டார். நேற்று 3வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் பெண்கள் சிறையில் உள்ள ...

Read More »

மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை!

மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு போராட்ட மக்களுக்கும் சிறுவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று(9)ஒருதொகுதி உதவிகளை வழங்கிவைத்துள்ளார். இதேவேளை, கேப்பாப்புலவில் 709ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவு பொருள்களையும் வழங்கிவைத்துள்ளார். அத்துடன், கேப்பாப்புலவில் போராட்ட மக்களை சந்தித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுட்ட மக்கள் தொடர்பில் மக்கள் கருத்துககளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்துரைத்த ...

Read More »

ஒவ்வொரு தொகுதிக்கும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும்!

நாங்கள் மறுபிறவி எடுத்து புத்துயிர்வு பெற்றுத்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனை அமைப்பதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவானது தமிழ் மக்களின் தீர்வுக்காவும் எமது மண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவே மாத்திரமே இதனை மேற்கொண்டுள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். களுதாவளை மகா வித்தியாலைய தேசியபாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை தென் ...

Read More »

டிரம்ப் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது!

டிரம்ப் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது என்று வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு ஆண்டு தோறும் உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபரானது முதல் அவருக்கு வருடாந்திர உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 2017- ஜனவரியில் அதிபராக பொறுப்பேற்ற டிரம்பிற்கு நேற்று 2-வது முறையாக உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் பரிசோதனையை வெள்ளை மாளிகையில் அதிபருக்கான மருத்துவர் சீன் பி கோன்லே தலைமையிலான மருத்துவக்குழு மேற்கொண்டது. 4 மணி நேரம் நடைபெற்ற ...

Read More »

விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!- அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர்களின் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பிராந்திய பகுதிகளில் வாழ விரும்பும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என குடிவரவு துறை அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார். சிட்னி, மெல்பேர்ன், குயின்ஸ்லாந்து போன்ற நகரங்களில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் குறித்த நகரங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமா பிராந்திய பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்புவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் பிரதேச செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு ...

Read More »

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ். மாநகரில் களியாட்டங்களுக்குத் தடை!

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் சபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். “யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்தல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடை ...

Read More »

பண மோசடி செய்த மத போதகருக்கு விளக்கமறியல்!

கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் – நம்பிக்கை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் போதகராக கடமையாற்றுபவர், குருநகரைச் சேர்ந்த நபர் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளார். கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கு அந்த நபரிடம் 45 இலட்சம் ரூபா பணம் வேண்டும் என்றும் போதகர் தெரிவித்துள்ளார். அதன்படி முதல்கட்டமாக 35 இலட்சம் ரூபாவை வழங்குமாறு போதகர் ...

Read More »

கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை – ஐ.நா. அறிக்கை

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது. இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ...

Read More »

ஆஸி. அணியில் ஸ்மித், வோர்னர் இல்லையெனில் அது பைத்தியக்காரத்தனம்!

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணிக் குழாமில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இல்லையன்றால் அது பைத்தியக்காரத் தனம் என அவுஸ்திரேலிய  அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.   ஸ்மித் மற்றம் வார்னர் மீதான தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதியுடன் முடைவடைகிறது. ஆகையினால் இவர்கள் இருவரும் அவுஸ்திரேலிய அணியின் இடம்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையிலேயே ...

Read More »

டெல்லியில் உலகின் ஏழு அதிசயங்கள்!

டெல்லியில் உலகின் அதிசயங்கள் ஏழும் ஒரே இடத்தில் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் டெல்லியின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்து மீட்பர் சிலை, பாரிசின் ஈஃபில் டவர், ரோம் நாட்டின் கொலோசியம், இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் மற்றும் கிசாவின் பிரமீடு ஆகியவற்றின் வடிவமைப்புகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ...

Read More »