அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சார்ப்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் – பொதுமக்கள் கடும் கோபம்
கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு அவர் பீஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு சீனரும் இந்த நாட்டில் வாழ்வதற்காக பெருமைபடும் வகையில் இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும். நமது நாட்டின் ...
Read More »கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் அறிவித்துள்ளார். சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ...
Read More »கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்!- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 ...
Read More »சிறையில் உள்ள ஜோடி திருமணம் செய்துகொள்ள அனுமதியா?
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பரிபா அதெல்காஹ், ரோலண்ட் மார்சல். இருவரும் ஆராய்ச்சியாளர்கள். 60 வயது கடந்த இவர்கள் 38 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், பரிபா ஈரானுக்கு ஆராய்ச்சி நடத்த சென்றார். ஆனால் அவர் உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டு, அங்குள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக ஈரான் ...
Read More »காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம்!
கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அழைத்து செல்ல சீனாவிடம் அனுமதிக்கோரி காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம். இதில் கொண்டு வரப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள், வட ஆஸ்திரேலிய பிரதேசமான டார்வினுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பயன்படுத்தப்படாத கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீனாவிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலியர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க இருக்கின்றனர். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்திருக்கிறார். இந்த சூழலில், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரை விட்டு வெளியேற ஆஸ்திரேலிய அரசு ...
Read More »சீனாவில் 24 மணி நேரத்தில் 81 பேர் மரணம்!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் ...
Read More »கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது?
சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது என்ற சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் நாளை மறுநாள் (10) திங்கட்கிழமை கூடும் செயற்குழுவில் வாக்கெடுப்பை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க சஜித் பிரேமதாச முன்னதாக தீர்மானித்த நிலையில் அதற்கு செயற்குழு அனுமதியும் கிடைத்திருந்தது. இந்நிலையில் ரவி கருணாநாயக்க அல்லது நவீன் திஸாநாயக்கவை இந்த பதவியில் அமர்த்துமாறு ரணில் தரப்பு யோசனை தெரிவித்துள்ளது. ...
Read More »உயிரிழக்கும் நிலையில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீன தாய்க்கு அவுஸ்திரேலியா அனுமதி!
மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீனாவை சேர்ந்த தாய்க்குஅவுஸ்திரேலிய அரசாங்கம் கொரானாவைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரியில் விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய் மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிற்காக பேராhடிக்கொண்டிருக்கின்ற லி சாங்சியாங் என்ற 22 இளைஞனை பார்ப்பதற்கே இளைஞனின் தாய்க்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. ளைஞனின் தாய் மகனை பார்ப்பதற்காக விண்ணப்பித்த தருணத்திலேயே சீனா பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு ஸ்கொட் மொறிசன் அரசாங்கம் தடை விதித்தது. இந்நிலையில் தடையிலிருந்து இளைஞனின் தாய்க்கு விதிவிலக்கு அளித்துள்ள அரசாங்கம் மகனை பார்ப்பதற்காக ...
Read More »கொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு!
சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார். அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை இன்று காலை அதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமியைப் பற்றி டாக்டர் லீ வென் லியாங் (Li Wen Liang) இதற்கு முன்னர் எச்சரித்தார். ஆனால், அவ்வாறு செய்ததற்காக உள்ளூர்க் பொலிஸார் அவருக்குக் கண்டனம் விடுத்திருந்தனர். இதற்கு முன், அவரது மரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை வூஹான் நகர மத்திய ...
Read More »
Eelamurasu Australia Online News Portal