Tag Archives: ஆசிரியர்தெரிவு

இந்திய அணி நவம்பரில் ஆஸ்திரேலியா பயணம்

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. ஜனவரி மாதம் வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 21-ந் திகதி போட்டிகள் தொடங்குகிறது. ஜனவரி 18-ந் திகதியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிகிறது. 20 ஓவர் போட்டிகள் முதலில் நடக்கிறது. நவம்பர் ...

Read More »

பாலஸ்தீனத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது! – அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிகழாண்டு பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. அப்பகுதிகளில் ஹமாஸ் ...

Read More »

முன்னாள் கடற்படை தளபதி கைது செய்ய காத்திருக்கும் குற்றப் புலனாய்வு!

சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமானால், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரண்னாகொடவையும், தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவையும் கைது செய்ய சி.ஐ.டி. தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ...

Read More »

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் காலமானார்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார். இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லீம் மக்களுக்கு ...

Read More »

விலங்குகளை கண்காணிக்க விண்ணில் ஒரு கண்!

பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், கடந்த வாரம் ஒரு சிறப்பு ஆன்டனாவை, ரஷ்ய விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர். இந்த ஆன்டனா, பூமியிலுள்ள பறவைகள், விலங்குகளின் இடப்பெயர்ச்சி முதல் இனப் பெருக்கம் வரை கண்காணிக்க உதவும் என, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘ஐகாரஸ்’ எனப்படும், விண்ணில் இருந்து விலங்குகளை ஆராய உதவும் சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், தற்போது அந்த ஆன்டனாவை பயன்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர். இதற்கென, அதி நவீன ஐகாரஸ், ‘டிரான்ஸ்மிட்டர்’ கருவிகளை ...

Read More »

நடனத் திறனால் வியக்க வைத்த ஜெயலலிதா!

இந்திய பண்பாடு, அதோடு கலந்த தமிழர்களின் பண்பாடு மற்றும் பிரிட்டீஷ் நாகரிகம் இந்த மூன்றையும் தனக்குள் வசீகரித்துக்கொண்டு, தனித்து விளங்கிய ஓர் ஒப்பற்ற பெண்மணி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஷூட்டிங்கை முதன் முதலில் நான் பார்த்தது 1975-ம் ஆண்டு ஏவி.எம். ஸ்டூடியோவில் தான். ஒருநாள் மாலை வேளையில் இயக்குனர் மகேந்திரன் என்னிடம் வந்து, ‘ஜெயலலிதா அம்மாவை ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா?’ என்று கேட்டார். நான் அதுவரை ஜெயலலிதா பட ஷூட்டிங்கை பார்த்ததில்லை என்பதால், அதிக ...

Read More »

அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு!

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் டெலி போனில் பேசினார். அப்போது இவருக்கு வாழ்த்து கூறிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார். பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் ...

Read More »

காணாமல்போனோர் குறித்து முக்கிய தகவல்!- சாலிய பீரிஸ்

நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநே­க­மானோர் காணாமல்போயுள்­ளனர். இவ்­வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்­கையை பரி­சீ­லிக்கும் போது ஆசி­யாவில் மாத்­தி­ர­மன்றி, உல­க­ளா­விய ரீதி­யி­லேயே அதி­க­மானோர் காணாமல் போயுள்ள நாடாக இலங்கை உள்­ளது.முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் மூலம் பெறப்­பட்ட தர­வுகள் மற்றும் தற்­போது பெறப்­பட்­டுள்ள தர­வு­களின் அடிப்­ப­டையில் இரு­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர் என்று காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரி­வித்தார். காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு எதிர்­வரும் 30ஆம் திகதி காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது. ...

Read More »

‘தமிழர் மரபுரிமை பேரவை’ மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து “மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கான பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது. இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன்!

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More »