Tag Archives: ஆசிரியர்தெரிவு

கடும் மழையின் மத்தியிலும் மன்னாரில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்கின்றது!

மன்னாரில் தொடர்சியாக மழை பெய்து வருகின்ற நிலையிலும் திட்ட மிட்ட வகையில் மன்னார்  சதொச  விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள  சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய விற்பனை நிலையத்துக்கான கட்டுமான பணி இடம் பெற்ற போது குறித்த வளாக பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து குறித்த வளாகப் பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...

Read More »

போர்முனையும் பேனா போராளியும்!

‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் ...

Read More »

சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்!

சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாககாவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மெங் ஹாங்வே செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் அவரை காணவில்லை என தகவல் ...

Read More »

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரை பராமரித்த வைத்தியர் காலமானார்!

தமிழீழ தேசியத்தலைவரது தாயாரினை இவரது இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் இயற்கை எய்தியுள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி ) இன்று ஞாயிறு காலை இயற்கையெய்தியிருந்தார். சிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார். தமிழீழ தேசிய தலைவரின் நன்மதிப்பினை பெறறிருந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இன்று முதல் நேரமாற்றம்!

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நேரமாற்றம் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அமுலுக்கு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2மணிக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக முன்னோக்கி நகரவுள்ளது. குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

அமெரிக்கா, வடகொரியா தலைவர்கள் இரண்டாவது சுற்றுப்பேச்சு!

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய ...

Read More »

இரட்ணஜீவன் கூல்- மணிவண்ணன் வழக்கு இணக்கசபைக்கு மாற்றம்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இணக்க சபையில் முறைப்பாட்டாளரும் எதிரியும் இணக்கப்பாட்டுக்கு வராவிடின் வழக்கை வரும் நவம்பர் 14ஆம் திகதி விளக்கத்துக்கு நியமிப்பதாகவும் நீதிமன்று கட்டளை வழங்கியது. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக ...

Read More »

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது சம்பந்தமாக பேசி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார். அண்மையில் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...

Read More »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்த 35 பேரும் எங்கே?

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் கடந்தவார இறுதியில் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த முகாமில் எஞ்சியிருந்த 35 பேரையும் அவுஸ்திரேலியாவிலுள்ள முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகுமூலம் வந்தவர்களை தடுத்து வைத்து பரீசிலிக்கவென கடந்த 2008ம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் நிர்மாணிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்தவார இறுதியில் மூடப்பட்டதை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கிறிஸ்மஸ் தீவில் எஞ்சியிருந்த 35 பேர் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு ...

Read More »

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும்!- பாகிஸ்தான்

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ஆக்சன் ஏய்டு” என்ற தொண்டு நிறுவனம் பாகிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகும், வறுமை ஒழிப்பு, கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணியை “ ஆக்சன்ஏய்டு” தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில், 60 நாட்களுக்குள் தங்கள் செயல்பாடுகளை ...

Read More »