Tag Archives: ஆசிரியர்தெரிவு

இலங்கை பிரஜைகளிற்கு பாதிப்பா? தகவல்களை பெற முயற்சி!

நியுசிலாந்தில்  இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை பிரஜகைள் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பாரதூரமானது!

பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக  தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்  நேற்றைய(14) தினம் நடத்திய ஊடாக சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு ஆளுனரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பெருபான்மை அரசால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது. இங்கிருந்து பலர் ஜெனிவா சென்றுள்ள நிலையில் ஆளுநரிடம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தேடப்படும் இலங்கை இளைஞன்!

இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேர்த் மாநகரின் Langford பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக காவல் துறையினர்  தகவல் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, 28 வயதான ...

Read More »

வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால  அவகாசம்  வழங்க கூடாது,  சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்  பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புனர்வு ஊர்தி  இன்று(14) கிளிநொச்சியை சென்றடைந்தது   கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை சென்றடைந்தது. இந்நிலையில் எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

Read More »

மஹிந்தவுக்கு எச்சரிக்கை! ரணிலிடம் கோரிக்கை!

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் எதிரணியில் இருந்துகொண்டும் அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றோம். எனவே எமது ஒத்துழைப்புகளை விளங்கிக்கொண்டு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தடுக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடமும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரின் தேசியக்கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம்,மற்றும் புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி,தொழிற்பயிற்சி,மற்றும் ...

Read More »

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை!

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மருத்துவரின் கொலை எவ்வாறு கசிந்தது!

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் அதிரடியான புதிய தகவல்கள் கசிந்துள்ளன. சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் ப்ரீத்தி ரெட்டி (வயது 32) மார்ச் 4 ஆம் திகதி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார். ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் காதலன், ப்ரீத்தியை திட்டமிட்டுக் ...

Read More »

மாதா அமிர்தானந்தமயி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம்!

இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆன மாதா அமிர்தானந்தமயி தேவி வரும் ஏப்ரல்- மே மாதங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி தேவி  இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார்.  இவர் பக்தர்களால் “அம்மா” என்றும், மேலைநாட்டு பக்தர்களால் “அரவணைக்கும் அன்னை” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற கிராமத்தில் மாதா அமிர்தானந்தமயிமடம் அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டுள்ளார். இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிளும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் ...

Read More »

சிறிலங்கா காவல் துறைக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது!

குற்றம் தொடர்பில் காவல் துறைக்கு  தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, காவல் துறைக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளதென ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ்காவல் துறை தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அமர்வின் போது குற்றங்களை தடுக்க விசேட காவல் துறை காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். ...

Read More »

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More »