ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புனர்வு ஊர்தி இன்று(14) கிளிநொச்சியை சென்றடைந்தது
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை சென்றடைந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும்
போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal