Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொழும்பில் 32 வெளிநாட்டவர்கள் பலி!

கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தாக்குதலை நடத்தியவர் இவரா?

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த நபரே தனது பையில்கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் குறித்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக காவல் தறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிக்கு சரமாரி கத்திக்குத்து!

தாய்லாந்தில் இளம்பெண்ணின் ஆடையை களைய முயன்றவரிடம் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 43 வயதான வெய்ன் மார்க்ஸ் என்பவர், தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று வெய்ன் மார்க்ஸ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் மதுக்கடை ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த சானி இன்ராராங் (30), நேரடியாக ஒரு பெண்ணிடம் சென்று மேலாடையை கழற்றி தருமாறு வற்புறுத்தியுள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், சிறிது நேரம் ...

Read More »

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை!

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர். இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் ...

Read More »

இரண்டு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் குண்டு வெடிப்பு!

சிநிலங்காவில்  இரண்டு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு இடங்களில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள ஆலயம் ஒன்றிலும், நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. முதற்கட்டமாக 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  

Read More »

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

02 ஆம் இணைப்பு இன்று ஆறு இடங்களில் நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 102 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6  இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவல் துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி  ​தேவாலயம்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  

Read More »

அவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி!

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது. அங்கிருந்து எப்படி வெளியேறுவது எனத் திக்குமுக்காடிய நேரத்தில், அற்புதமான யோசனை அவர்களுக்குத் தோன்றியது. உதவி நாட HELP எனும் வார்த்தையை அவர்கள் சேற்றில் செதுக்கினர். அதன் அருகில் இருந்த பகுதியில் தீ மூட்டினர். அந்தச் செயல் பலன் தந்தது. அந்த வழியே பறந்து சென்ற தேடல், மீட்பு விமானம், அந்த ...

Read More »

ஊடகவியலாளர் தயாபாரன் மீது தாக்குதலா?

யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ர ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிலில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த நபர் ஒருவர் மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அச்சுவேலி காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்கல் புலம்பெயர் சமுகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கான உடுப்பிட்டிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார். குறித்த சம்பவம் சாதாரண ...

Read More »

தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். அதை மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் ...

Read More »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததா என்பது பற்றி விசாரணை நடத்திய விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்ப்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ...

Read More »