தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். அதை மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்கச் செய்யுமளவிற்கு தேசிய உணர்விற்கு அடையாளமாக இருந்த போராட்டத்தை இல்லாமல் செய்துள்ளனர். ஆனால் போராட்டத்தை ஒருபோதும் நாம் மறக்க விடமாட்டோம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal