Tag Archives: ஆசிரியர்தெரிவு

உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை குறிவைக்கிறோம்!-ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை

ஆஸ்திரேலியாவில் அதிகம் சம்பளம் பெறும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கு விரைவாக நிரந்தர வதிவிட விசா வழங்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆண்டுக்கு 5000 பேர் என்ற கணக்கில் Fintech, Space, Advanced Manufacturing உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. “இத்திட்டத்தின் மூலம், உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை நாங்கள் குறிவைக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள துறைகளில் ஆண்டுக்கு 149,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 70 லட்சம் இந்திய ...

Read More »

அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்- போராட்டத்தை ஆரம்பித்த சுமங்கள தேரர்!

வணக்கத்திற்குரிய இங்குருவத்தே சுமங்கள தேரர் இன்று காலை கொழும்பு இன்று காலை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தல் உண்ணாரவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமைக்கான ஆதாரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர் இநத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Read More »

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் கவனயீர்பு ஆர்பாட்டம்!

யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறுவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில்  கவனயீர்பு ஊர்வலமும் போராட்டத்திலும் நேற்று சனிக்கிழமை ஈடுபட்டனர் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் காணாமல் போன உறவுகள் யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 2 பேர் பலி; 150 வீடுகள் நாசம்!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீ காரணமாக நாசமாகி உள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில், ”ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும், காட்டுத் தீ ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் மனுக்களுக்கு நீதி கிடைக்க வாதிடும் குருபரனுக்கு நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது. மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவு ...

Read More »

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டை…..!

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி வழங்கும் கடிதத்தை, வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணமாக ஏற்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வாதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றுடன், புகைப்படத்துடன்கூடிய தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் அடங்கிய கடிதம் ஆட்பதித்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வாக்களிக்கும்போது, வாக்குச்சீட்டில் தவறிழைக்கப்பட்டால், அதற்காக மற்றுமொரு வாக்குச்சீட்டு வழங்கப்பட மாட்டாது ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் தீவிரவாத நிதியை தடுக்க இந்தியா வலியுறுத்தல்!

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டு பவர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. ‘தீவிரவாதத்துக்கு நிதி இல்லை’ என்ற தலைப்பிலான மாநாடு ஆஸ்தி ரேலியா தலநகர் மெல்போர்னில் நடந் தது. தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப் பதைத் தடுக்க இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட ‘எக்மோன்ட் குழு’ என்ற அமைப்பு 1995-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த நாடுகளைச் சேர்ந்த ‘நிதி நுண்ணறிவுப் பிரிவுகள்’ சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய ...

Read More »

விமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல்! -தண்டனைக்காலம் குறைப்பு!

விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவின் விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருடன் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று, விமானத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார். எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான ...

Read More »

இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை  Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது.   இரத்மலானையில் இருந்துபுறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது FitsAir விமானம். இதில் இந்த விமான சேவை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது. மீண்டும் இந்த விமானம்  பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச் ...

Read More »

11ஆம் திகதி விசேட நாடா­ளு­மன்ற அமர்வு!

விளை­யாட்­டுக்கள் தொடர்­பான தவ­று­களைத் தடுத்தல்’ சட்­ட­மூ­லத்தை விரைவில் நிறை­வேற்ற வேண்டும் என்ற கார­ணத்தை அடிப்­ப­டை­யாக வைத்து நவம்பர் 11 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  முற்­பகல் 11.30 மணிக்கு விசே­ட­மாக நாடா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நிலை­யியற் கட்­டளை இலக்கம் 16ற்கு அமைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க எதிர்­வரும் நவம்பர் 11 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  முற்­பகல் 11.30 மணிக்கு விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நேற்று பிற்­பகல் கூடிய நாடா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக் கூட்­டத்தில் ...

Read More »