Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ….!

கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமான விபத்து : 5 பேர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செயதிகள் தெரிவிக்கின்றன. வட அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லான்ந்து பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் பறந்துக்கொண்டிருந்து விமானம் சீரற்ற காலநிலயை தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்தே , அந்நாட்டின் பூர்வீக சமூக குடியேற்றமான லாக்ஹார்ட் கடற்கரை அருகே விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே விமானம் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தேர்தலில் உள்நாட்டு, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக, பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 40 பேர் இலங்கை வர உள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு கையளிக்கும் நாள் தொடக்கம் கண்காணிப்புச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்களும் இத்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். வேட்புமனுக்கள் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி ...

Read More »

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா!

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் ஒருவருக்கே இவ்வாறு, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. அவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாலி சுற்றுலா பயணிக்கு வழிகாட்டியவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

Read More »

கோவிட்-19 பெயரில் கணினி வைரஸ் தாக்குதல் !

கோவிட்-19 காய்ச்சல் அச்சுறுத் தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதையும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் பட்டு வருகின்றன. தற்போது கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலைப் பயன் படுத்தி கார்ப்பரேட் நிறுவனங் களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது ...

Read More »

ஆயிரம் பேர் கிரீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தம்

துருக்கியில் இருந்து கிரீஸ் எல்லை வழியாக கடந்த 24 மணி நேரத்தில் சட்ட விரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 963 பேரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. சிரியா மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் ...

Read More »

எங்களுக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை!

ஆஸ்திரேலிய அணிக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பெவன் மற்றும் இந்தியாவின் எம்எஸ் டோனி ஆகியோர் தலைசிறந்த பினிஷர் என்றால் அது மிகையாகாது. இவர்களை போன்ற ஒரு பினிஷர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை ...

Read More »

சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்!

இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால்  தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞனார்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் ...

Read More »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- ஒரு பெண் உட்பட இருவருக்குப் பிணை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ;ஏனைய 59 பேரின் விளக்க மறியல் அடுத்த மாதம் 24 திகதி வரை வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 64 கைது செய்யப்பட்ட ...

Read More »

பீதி காரணமாக தனிமையில் பிரார்த்தனை நடத்திய போப் ஆண்டவர்!

வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கொரோனா பீதி காரணமாக தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார். சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு ...

Read More »