அதிக வாசிப்பு

குண்டை வெடிக்க வைத்து விட்டு உயிர் தப்பிய சஹ்ரான்! – அரச புலனாய்வாளர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தினத்தில் சங்கிரிலால் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை ஜஹ்ரானே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஜஹ்ரானும் இன்னொரு தற்கொலை குண்டுதாரியும் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் ஆனால் ஜஹ்ரான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜஹ்ரான்  குண்டொன்றை பொருத்தியிருக்கலாம் அல்லது தொலைவிலிருந்து அதனை வெடிக்க ...

Read More »

நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்!

பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தனது நீண்டநாள் காதலருடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை அவர் உயர்த்தினார். அத்தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்ட 20 கிலோகிராம் போதைப்பொருள் அந்தப் பொட்டலத்தில் அடங்கியிருந்தது. அதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மெல்பர்ன் நகரின் மற்றொரு பகுதியில் 21 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More »

ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் வவுணதீவு காவல் துறை மீது!

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு காவல் துறை மீதான தாக்குதல் என காவல் துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு காவல் துறை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறை அவரிடம் மேற்கொண்ட ...

Read More »

ஐ.எஸ் பயங்காரவாதிகளின் ஆடைகளும் ஆயுதங்களும் மீட்பு!

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான சில பொருள்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக, காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேரக தெரிவித்துள்ளார். இதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆடைத் தொகுதியொன்றும் ஐ.எஸ் என்று எழுதப்பட்ட அவர்களுடைய கொடியொன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, 150 ஜெலெட்க்னைட் குச்சிகளும் 100,000 இரும்பு குண்டுகளும் ஒரு ட்ரோன் கமொராவும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »

மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாயார் அதிரடியாக கைது!

கடந்த ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தார். அவரின் தாயாரே தாக்குதல்தாரியை அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். நேற்றிரவு புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு ...

Read More »

விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது. விமான பயண சீட்டுகளை கொள்வனவு செய்தல் விமான பயணத்திற்கான நாளில் மாற்றத்தை மேற்கொள்ளுதல் ஆசன ஒதுக்கீது விமானம் புறப்படுதல் மற்றும் வரும் நேரங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ளுதல் முதலானவை இந்த அலுவலக சேவையில் இடம்பெறுகின்றன. மட்டக்களப்பு கம்பஹா அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் குருநாகல் வவுனியா வென்னப்புவ பேராதனை ஆகிய ...

Read More »

வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சாவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

Read More »

மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகள்?

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் பிரபல ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ...

Read More »

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

02 ஆம் இணைப்பு இன்று ஆறு இடங்களில் நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 102 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6  இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவல் துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி  ​தேவாலயம்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  

Read More »