கொட்டுமுரசு

வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன?

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. இதனிடையே, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்தும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு, டெலிகிராம், சிக்னல் ...

Read More »

ஏன் எனது தந்தை இறக்கநேரிட்டது

மிக் உடன்படிக்கை என்பதை ஒரு சிறுமியாக நான் முதன்முதலில் 2007இல் கேள்விப்பட்டவேளை- அந்த சொற்கள் எனது தந்தையின் பத்திரிகையில் எழுதப்படுவது- இரண்டு வருடங்களிற்கு பி;ன்னர் நான் எனது வாழ்வின் மிகவும் துயரம் மிகுந்த நாளில் -நான் அவரது புதைகுழியின் முன்னாள் நிற்பதற்கு வழிவகுக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தந்தை மிக்விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருக்காவிட்டால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் இன்றும் எழுதிக்கொண்டிருந்திருப்பார்- இன்றும் தவறுகளை பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்திருப்பார் – எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் துணிச்சலுடன நின்றிருப்பார் என்பது நீண்ட காலமாகவே நானும் ஆதாரங்கள் குறித்து பரிச்சயமுள்ளவர்களும் ...

Read More »

குவாண்டம் உலகத்தில் ரகசியங்களைப் பாதுகாப்பது எப்படி?

மற்றவர்களுடன் நாம் நிகழ்த்தும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் இருவரின் அனுமதியில்லாமல் மூன்றாவது நபர் அதனைப் படிக்க முடியாது. இதற்குத் தரவுகளைச் சங்கேதமாக்குதல் (encryption) என்று பெயர். அகல்யா என்ற முதல் நபர் பாபு என்ற இரண்டாம் நபருக்குச் சங்கேதப்படுத்தப்பட்ட தகவலை அனுப்புகிறார். பாபு மட்டுமே அந்தச் சங்கேதத்துக்கான திறவுகோலைக் கொண்டிருக்கிறார் என்றும், கதிர் என்ற மூன்றாவது நபர் இங்கே ஒரு பரிவர்த்தனை நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், அதில் அவர் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்றும் அகல்யா எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள ...

Read More »

பெருந்தொற்றுகளைத் தடுக்க என்ன வழி?

ஐக்கிய நாடு அவையின் சூழலியல் அமைப்புக்கான சமீபத்திய கருத்தரங்கில் தொற்றுநோய்ப் பரவலில் சூழலியல் சீர்கேடுகளின் பங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முடிவில், “இத்தனை வருடம் தொடர்ச்சியாக நடந்த சீர்கேடுகளின் மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்கவிருக்கிறோம். கரோனா என்பது அதன் ஆரம்ப நிலை மட்டுமே; இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் நான்கைந்து புதிய தொற்றுநோய்கள் உருவாகலாம். அதில் ஒன்று கரோனா போன்று சர்வதேசத் தொற்றுநோயாக மாறலாம்” என அறிக்கை விட்டிருக்கிறது. “சுற்றுச்சூழல் மீது சமீப காலங்களில் மனிதர்கள் நிகழ்த்திவரும் மிக மூர்க்கமான தாக்குதல்களின் விளைவு இப்படித்தான் ...

Read More »

சர்வதேசச் சமவாயமும் இலங்கை அரசியல் யாப்பும்

சர்வதேச சமவாயத்தைக் கொச்சைப்படுத்தும் முறையிலேயே இலங்கை பாராளுமன்றம் 2007 இல் அதனை அங்கீகரித்துள்ளது என்பதைக்கூட ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்குச் சம்பந்தன் இடித்துரைக்கவில்லை. மாறாக ரணில் மைத்திரி அரசாங்கம் மீதான பொய்யான நம்பிக்கை மாத்திரமே மக்களுக்கு ஊட்டப்பட்டது. சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் ...

Read More »

யாழ். மாநகர சபையின் அரசியல்; யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்?

‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!” என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. ‘நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்” என்பது இதன் பொருள். நடந்து முடிந்த யாழ்நகர மேயர், நல்லூர் தவிசாளர் தெரிவுக்கான கொடுக்கல் வாங்கலில் வென்றது யார்? தோற்றது யார்? யாருக்கு லாபம்? அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும், தலைவிரித்தாடும் கொரோனா கொடுநோயின் தாக்கம் பற்றியும் எல்லோரும் மோதிக் ...

Read More »

2020 இல் பெற்றதும் கற்றதும் – “புதிய வழமை” இப்படித்தான் தொடரப் போகின்றதா?

உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசியத்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துவிட்டது. நாட்டின் அசைவியக்கத்தையும் இது பெருமளவுக்குப் புரட்டிப்போட்டுவிட்டது. புதிய அரசியல் குழப்பங்களுக்கும் இது காரணமாகிவிட்டது. கொரோனாவின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பேரினவாதம்தான் இலங்கையை ஆட்சி செய்யப்போகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2020 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினரை முற்றாக ஓரங்கட்டும் அவர்களுடைய செயற்பாடுகள் இலங்கையை ஒரு பௌத்த ...

Read More »

மன்னாரில் கண்வைத்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம்

மன்னார் தீவுக்கடலில் பெற்றோல் உண்டு என்ற கதையாடல் மட்டுமல்ல, பெட்ரோலிய ஆய்வுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் அழைந்திருந்தமை எல்லாம் நாம் அறிந்த செய்தி. ஆனால் மன்னார் தீவின் கனியவளங்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று ‘கண்’ வைத்திருப்பது மட்டுமல்லாது அவ்வளங்களை சத்திமில்லாமல் ஏற்றுமதி செய்துவருவதான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. 26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார்தீவின் மணலில் இல்மனைட் என்ற கனிய வளங்கள் உள்ளன. இக்கனிமம், வண்ணப்பூச்சுகள், மை, பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதனப் ...

Read More »

எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்?

திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் ஏற்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு ...

Read More »

ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை?

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார். அதன்படி ஏற்கனவே உள்ள ...

Read More »