கொட்டுமுரசு

எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது வடமாகாணசபை தேர்­தல்?

வடக்கு மாகாண சபை, தனது ஆயுள் முடி­வடைவதற்­கான நாள்­களை எண்­ணிக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்­த­வ­ருட இறு­தி­யில் அல்­லது அடுத்த வருட ஆரம்­பத்­தில் வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில், வடக்கு மாகாண சபைக்­காக நடை­பெ­றப்­போ­கும் புதிய தேர்­தலை பெரும்­பான்­மைக் கட்­சி­கள் இலக்கு வைத்து அதற்­கேற்ப காய் நகர்த்­தல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கி­றது. தென்­னி­லங்­கைக் கட்­சி­க­ளின் வடக்கு நோக்­கிய வருகை கூட்டு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா ...

Read More »

ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்!

ராஜபக்‌ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்‌ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் பிரச்சினைகளில், மொழிக்கொள்கை முக்கியமானது. ஆட்சியிலிருந்த காலத்தில் அது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ராஜபக்‌ஷக்கள் எந்த ...

Read More »

எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை!

“எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் உத்தரவாதப்படுத்தி சீர்திருத்தப்படல் வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் பரிந்துரைகளின் படி அரசாங்கம் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு கண்டனப்போராட்டமொன்றினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து இப்போராட்டத்திலில் பங்குபற்றிய பெண்களைக் கொச்சைப்படுத்தியும் வன்மமாக திட்டியும் பேஸ்புக், இணையதளங்களில் பல ஆண்கள் பதிவுசெய்து வருகின்றமையைக் ...

Read More »

தி.ஜானகிராமன்: அன்பின் நித்தியச் சுடர்!

தி.ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வசீகரிப்புக்கும் அதேசமயம், தீவிர இலக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கும் இடமளித்தவை. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜானகிராமனுக்கும் ஜெயகாந்தனுக்கும் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. ஜெயகாந்தன் தன் காலத்துக்குரிய கருத்துரீதியான கதையாடல்கள் மூலம் இதை சாத்தியப்படுத்தினார். ஜானகிராமன் என்றென்றைக்குமான உணர்வுகளின் நெகிழ்ச்சியான கதையாடல்கள் மூலம் இத்தன்மையை வசப்படுத்தினார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளில் தத்துவார்த்த ஒளி கூடிய புதிய வெளிச்சம் சுடர்விட்டது. அன்பு, காதல், ஆன்மா, வாழ்வின் அர்த்தம் என்றாக அமைந்த நவீன செவ்வியல் படைப்புகளை ஸ்வீடனின் ...

Read More »

நிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இலங்கை குறித்த இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான நிபுனரும் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விஷேட அறிக்கையிடும் ஐக்கிய நாடுகள் நிபுனரும் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தயாரித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித ...

Read More »

தமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா?

சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் விவாதிப்பதே மேற்படி கூட்டத்தின் முக்கிய நோக்கம். பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றனர். விக்கினேஸ்வரனையே தொடர்ந்தும் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாக இருந்திருக்கிறது. அவர்களைப் பொருத்தவரையில் விக்கினேஸ்வரன் ஒரு அணியாகவும் தமிழரசு கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டால், தமிழரசு கட்சி நிச்சயம் தோல்வியடையும். கூடவே ...

Read More »

இழந்து விட்ட அரசியல் ஓர்மம்!

தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் ...

Read More »

வாஜ்பாய்: மாற்றாரும் நேசித்த தாமரை!

இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் தன்னிகரற்றவர். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், பெரிய மக்கள் தலைவர். இளமைக் காலம் பள்ளிக்கூட ஆசிரியர் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் – கிருஷ்ணா தேவிக்கு 1924, டிசம்பர் 25 அன்று குவாலியரில் புதல்வராகப் பிறந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். சகோதர, சகோதரிகள் உண்டு. பூர்விகம் உத்தர பிரதேசத்தின் பாதேஷ்வர் என்றாலும் தாத்தா பண்டிட் ஷியாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு இடம்பெயர்ந்துவிட்டது வாஜ்பாய் குடும்பம். சரஸ்வதி ...

Read More »

நாயாறு எரியூட்டல்!

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒன்றரை மாதங்களுக்குள், வடக்கு கடற்கரையோரங்களில் தொழில் உபகரணங்கள், படகுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டி அழிக்கப்பட்ட, மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கின் கட்டைக்காடு, தாளையடிப் பகுதிகளில் ஏற்கெனவே ...

Read More »

புதிய அரசமைப்பு…தூறலும் நின்று போச்சு!

தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்…” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன். “என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டில் ...

Read More »