கொட்டுமுரசு

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோய்!

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக ...

Read More »

மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்!

போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து ...

Read More »

நீதித்துறை மீண்டும் தோல்வி!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது பெரிய எதிர்விளைவுகள், போராட்டங்கள், சர்ச்சைகளை ...

Read More »

மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது?

பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும்  பயன்படுத்தவேண்டிய தருணம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிக்காக  மோடியை மாத்திரம் பாராட்டவேண்டும், குஜராத்தில் தான் கற்றுக்கொண்டதை அவர் தேசிய அளவில் பயன்படுத்தியுள்ளார். என்னை போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் மோடியினால் மீண்டும் அந்த மாயாஜாலத்தை செய்து காண்பிக்க முடியாது என கருதினார்கள். ஆனால் இந்த விடயத்திலேயே மோடி மேதையாக காணப்படுகின்றார். நான் எப்போதும் அவர் பின்பற்றும் கொள்கைகயையும் அவரது பாணி அரசியலையும் விமர்சித்து வந்துள்ளேன். ஆனால் அவர் பாரம்பரிய ...

Read More »

ஈழப்பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் குறியீடுதான் இசைப்பிரியா!

2009 – 2019 பத்து ஆண்டுகளாயிற்று. இலங்கையில் தமிழர் பகுதியில் நடந்த யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாயிற்று. 2009 மே மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வாழ்வில் தாங்கவே முடியாத பெரும் வலியை, துயரத்தை அளித்த காலம். இறுதி யுத்தத்தில் ஐ.நா சபை வழிகாட்டிய போர் முறைகள் அரசுத் தரப்பில் அப்பட்டமாக மீறப்பட்டது பின்னாளில் வெளிச்சத்துக்கு வந்தன. மருத்துவமனை, பள்ளிக்கூடங்களில் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து, ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அந்த நாள்களை நினைவுகூர்ந்தாலும் ஈழத்தமிழர்களின் அழுகையின்றி முடிவதில்லை. அதிகாரபூர்வமாக 40,000 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ...

Read More »

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை! ...

Read More »

கண்ணீருடன் கடந்த ஒரு மாதம் !

இலங்கையில் மீண்டும் எது இடம்பெறக்கூடாதென மக்கள் நினைத்தார்களோ அது மீண்டும் நடந்து முடிந்து இன்றுடன் ஒரு மாதம் கனத்த மனத்துடனும் கண்ணீருடனும் கடக்கின்றது. கடந்த 30 வருடகால உள்நாட்டுப்போர் ஓய்ந்து குண்டுச் சத்தங்களுக்கும் ஆயுதங்களுக்கும் ஓய்வுகொடுத்த இலங்கை, பத்து வருட நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வேளை, மீண்டும் இலங்கையை அதிரவைத்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்கள்.       இலங்கை மக்களாலோ ஏன் உலக மக்களாலோ ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இடம்பெற்ற அந்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையின் சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் ...

Read More »

ஈரானின் இராஜதந்திர போர் 2019!

ஈரானுடனான உலக நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்ட ஓராண்டுக்குப் பின்னர் ஈரான் அதன் யுரேனியத்தை தொடர்ச்சியாக வைத்திருத்தல் என்று அறிவித்ததன் மூலம், மேற்குலகத்துக்கு உறுதியான மற்றும் தெளிவான செய்தியை ஈரான் சொல்லியிருக்கிறது. கடந்தாண்டு, ஐரோப்பிய முக்கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்க முற்பட்ட வேளையில், ஐரோப்பிய நாடுகள் ஈரானின் நன்னோக்கத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் எந்த ஒரு கொள்கை நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைக்கு ஏற்றதாகவே, ஈரானிய ஏவுகளை திட்டங்களைக் குறைக்க அல்லது ஈரானின் ...

Read More »

அச்சுறுத்தலில் பிராந்திய பாதுகாப்பு !

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் தீவிரவாதத்திற்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் விசாரணை நடவடிக்கைகள் ...

Read More »

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்!

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது. * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள். * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் ...

Read More »