இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக சில முக்கியமான பௌத்த மத பீடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்திருந்தன. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்த பலவீனங்களைக் கொண்டு இருபது நிறைவேற்றப்பட்டுள்ளது எனலாம். அத்தகைய பலவீனத்தை அதிகம் வெளிக்காட்டியவர்களாக சிறு கட்சிகளின் தலைமைகளைக் கூறலாம். ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தவிர்ந்த ...
Read More »கொட்டுமுரசு
விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் “விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீட்டிக்க, உள்துறை கவனத்தில் ...
Read More »ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையுமா?
நியூயோர்க்கில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனித உரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விடயத்திற்கு விபரமாக செல்லும் முன், ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பத்தேழு நாடுகளிற்கான அங்கத்துவம் எப்படியாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வடிப்படையில் – ஆசிய – பசுபிக்குக்கு (13) பதின்மூன்று நாடுகளும், ஆபிரிக்காவிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், ...
Read More »நியூசிலாந்து தேர்தலில் ஜசிந்தா ஆர்டன் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னணி
அக்டோபர் 17ல் நடைபெற்ற நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலிலே லேபர் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கின்றது. நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல், செப்டெம்பர் 19ல் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்பட்டதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொற்றின் வீரியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. இருந்தாலும் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலை நிலவியது. அதனால் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது பொருத்தமில்லை. வாக்களிப்பதற்கான இயல்பான சூழல் மக்களுக்குக் கிடைக்காது என்னும் அபிப்பிராயம் கட்சிகளிடையே ஏற்பட்டது. அதனாலேயே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் நியூசிலாந்தில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலாவது ...
Read More »பொம்பியோவின் விஜயமும் ஈழத் தமிழர் நிலைப்பாடும்
இரண்டாம் உலகப் போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது. கொரோனாவுக்கு பின்னான உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பாக அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் படைத்த பதவி வகிக்கக்கூடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (United states Secretary of State) மைக் கொம்பியோ (Mike Pompeo) இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இன்றைய நெருக்கடியான சூழலில் ராஜரீக பயணத்தை மேற்கொள்வது ...
Read More »20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு
இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19 ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்சவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே கோத்தாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததோ அதே 19 ஆவது திருத்தத்தை ...
Read More »தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை
கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா ? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்துகொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப் போவதில்லை என்பதனை கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்தில் வைத்து தெளிவாக கூறியிருக்கிறார். விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் அப்படித்தான் ...
Read More »நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்
நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார். நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகின்றார். இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியிருந்தது. ஆக்லான்டில் போட்டியிட்ட இவர், தேர்தலில் ...
Read More »உள்ளங்கைப் புண்ணுக்கு இதயத்தில் சத்திரசிகிச்சை
இன்று இந்த நிலைமைக்குச் சென்றிருக்காது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: “இலங்கையின் வெளிவிவகார கொள்கை என்பது இப்பொழுது பாரிய விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் நாடு அல்லோல கல்லோலப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், இருபத்தியொருபேர் கொண்ட சீன உயர்மட்டக் குழுவினரின் வருகையும் இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக்பொம்பியோ வரவிருப்பதும் இதற்கு முன்னர் இந்திய – இலங்கை பிரதமர்களுக்கிடையிலான ...
Read More »இலங்கைத் தீவில் சர்வாதிகார பெரும்பான்மை ஆட்சி தலையெடுக்கிறது
ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சிங்களத் தேசியவாதம், பௌத்த அடிப்படைவாதம் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றிவாகும். மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் போர்க் கதாநாயகர்களாக சிங்கள-பௌத்த பெரும்பான்மையினால் கணிக்கப்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி மற்றும் ‘ஈஸ்ரர் 2019’ தாக்குதலுக்கு இட்டுச்சென்ற பாதுகாப்பு முன்னேற்பாட்டுக் குறைபாடு என்பன அதே ஆண்டு கோத்தபாய ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் பதவியேற்பதற்குரிய வழியைத் திறந்துவிட்டிருந்தது. 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான சூழல், குடும்ப ஆட்சிக்கான அதிகாரத்தை மேலும் வலுவாக்கியுள்ளது:பொதுஜன பெரமுன – இடதுசாரிக் ...
Read More »