கொட்டுமுரசு

இலங்கைத்தீவில் சீன சகாப்தம்?

சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல.ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது.அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து ...

Read More »

யாழ் பொது நூலக எரிப்பு தமிழர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாச்சார தாக்குதல் , 40 ஆண்டுகள் நிறைவு

( 31/5/1981 இரவு எரிக்கப்பட்டு – 1/6/1981 மாலை ௭ரிந்து முடிந்தது . ) தென்னாசியாவில் இந்திய துணைக்கண்டத்துக்கு அருகேயுள்ள சுமார் 2500 வருடகால பழமையுள்ள தீவுத்தேசம் இலங்கை. கடந்த கால் நூற்றாண்டகளுக்கு மேலாக உள் நாட்டு போர் நடந்த பூமி இது. வடக்கே இருக்கும் தமிழரின் நகரான யாழ்பாணத்தின் ஒரு நெடிய போரின் மௌன சாட்சியான நூலகத்தின் கதை இது. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் ...

Read More »

தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே?

‘புதிய வழமை’ என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்னும் சில நாடுகள், ...

Read More »

மார்க்சிய தத்துவத்தை செழுமைப்படுத்தும் சீனக்குணவியல்புகளுடனான சோசலிசம்

கொழும்பு, (சின்ஹுவா ) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 100 ஆண்டுகளில் சாதித்த சீனாவின் அபிவிருத்தி மூலமாக மாரக்சிய தத்துவத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது என்று இலங்கையின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் டியூ குணசேகர கூறுகிறார். ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளளளர் குணசேகர சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு வழங்கிய நேர்காணலில் சீக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியிருக்கிறார். அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளினதும் அனுபவங்களில் இருந்து ...

Read More »

நமோ நமோ சீனா…

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம். இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என ...

Read More »

ஆதரித்து வாக்களித்த அ.இ.ம.கா உறுப்பினர்கள் இருவர் மீதும் விசாரணை

20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படவுள்ளது. ;கட்சியின் அரசியல் ; உயர்பீடம் நியமித்த, சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டின் தலைமையிலான மூவர் கொண்ட ஒழுக்காற்றுகுழு அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசாரிக்க தீர்மானித்துள்ளது . ;நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமகவே இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் மிக விரைவில் குறித்த விசாரணைகள் இடம்பெறும் எனவும், ஒழுக்காற்றுக்குழுவின் ...

Read More »

இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம்

இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்‌ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் ...

Read More »

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய கருத்து வருமாறு: 2009ஆம் ...

Read More »

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது. தமிழீழ விடுதலைப் ...

Read More »

பத்து நிமிடம் தாருங்கள் – இஸ்ரேலிடம் மன்றாடிய பத்திகையாளர்கள்

யும்னா அல் செயட் அந்த கட்டிடத்திலிருந்து தப்பி பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஒரு மணித்தியாலமேயிருந்தது. காஸாநகரில் 60 வீடுகளும் சர்வதேச ஊடகங்களின் பல அலுவலகங்களும் காணப்படும் 11மாடிகளை கொண்ட அல் ஜலாலா டவரில் ஒரு லிப்ட் மாத்திரமே இயங்குகின்ற நிலையில் அல்சையட் மிகவேகமாக மாடிப்படிகளில் இறங்கினார். முதலில் முதியவர்களையும் குழந்தைகளையும் வெளியேற்றுவதற்கு வழிவிட்டோம் என அவர் தெரிவித்தார். நாங்கள் அனைவரும் கீழே ஓடினோம் யாரால் குழந்தைகளை கீழே கொண்டுபோகமுடியுமோ அவர்கள் எல்லாம் குழந்தைகளை கொண்டுசென்றோம் என அவர் தெரிவித்தார். நான் இரண்டு குழந்தைகளை கீழே கொண்டுசென்றேன் ...

Read More »