புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் – 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து உலகம் தினமும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலின் விளைவாக சீனா ஆழமான சமூக சுகாதாரம் தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அங்கு 130,000 க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்ற அதேவேளை 4600 க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், அதிவிசேடமான பொதுச்சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்தியதன் மூலமாக நிலைவரத்தை இப்போது சமநிலைப்படுத்தியிருப்பதாக சீனா இப்போது ...
Read More »கொட்டுமுரசு
கோவிட்-19-க்கு எதிரான வாக்சைன் எப்போது தயாராகும்?
உலகம் முழுதும் கரோனா என்ற வைரஸ் பரவி சுமார் 11,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்துதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வாக்சைன் தயாரிப்பில் சில சோதனைக்கூடங்கள் ஈடுபட்டுள்ளன. இதுவரை நடந்தது என்ன? சீன ஆராய்ச்சியாளர்கள் நாவல் கரோனா வைரஸ் மரபணு வரிசையை அமெரிக்காவுக்கு அனுப்பிய 100 நாட்களுக்குப் பிறகு முதற்கட்ட மருத்துவ சோதனை 18 வயது முதல் 55 வயதினையுடைய 45 ஆரோக்கியமான நபர்களுக்கு அமெரிக்காவின் சியாட்டிலில் நடத்தப்பட்டது. இதுதவிர வேறுபட்ட வாக்சைன் அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் சோதனை ...
Read More »கொரோனா குறித்து இன்றைய நாளில் தற்போது வரையான நிலவரம்
கொரோனாவால் டுபாய்,சிங்கப்பூரில் முதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் தனிமைப்படுத்தலுக்கு உதவு ஆயுத படைக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில், கொரோனாவின் தாக்கம் குறித்து இன்றைய நாளில் தற்போதுவரையான ஒருபார்வையே இது, சீனாவின் நிலை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் (வெள்ளிக்கிழமை) சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதை அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு சென்ற 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட முதல் ...
Read More »கொரோனா உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள்!
வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் அது உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் எனவே தேவையற்ற அச்சங்களை விடுத்து ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வைகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலகம் இன்று ...
Read More »பொதுமக்கள் பாதுகாப்புக்காக தனிமனித சுதந்திரத்தை தியாகம் செய்வது குடிமைக் கடமை!
கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் 2,43,162 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 10,284 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது தீய முகத்தைக் காட்டி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 40க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று பரவியுள்ளது. இதில் அபாயம் என்னவெனில் இவர்களுக்கு கரோனா தொற்று எப்படிப் பரவியது, இதனை இவர்களுக்குப் பரப்பியவர் யார் யார்? அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் எத்தனை பேருக்குப் பரப்புவார்கள் என்பதும் தெரியாத நிலையில் இப்படித்தான் கரோனா பரவுகிறது ...
Read More »வன்னி வாக்குகளை பிரிக்கும் பலகட்சி அரசியல்!
அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது வெறும் வார்த்தை ஜாலங்களாகவே, தமிழ் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது என்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாகி உள்ளது. தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள், பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி உள்ளன. தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டிய, அவர்களது பிரச்சினைகள், நிறைந்ததே உள்ளன. இந்தச் சூழலில், தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் உள்ளதா என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது. பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நகர்வுகள், கைகூடாத நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆட்சேர்ப்பில், கட்சிகள் ...
Read More »பரசிட்டமோல், கோழி சூப், எலுமிச்சைச் சாறு கொரோனாவிலிருந்து மீண்ட வைத்தியர்!
பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர் ஆவார். இவர் நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்று லண்டனுக்குத் திரும்பியபோது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய்த் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார். கடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் ...
Read More »‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’
தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, ...
Read More »‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேமாகாணம், வூஹான் நகரில் முதன்முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலகசுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன. கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்: கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்துமற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பரவக்கூடும். மூக்கு, தொண்டை, ...
Read More »கொரோனா: இருமுனை ஆயுதம்
கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன. அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ...
Read More »
Eelamurasu Australia Online News Portal