கொரோனாவால் டுபாய்,சிங்கப்பூரில் முதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் தனிமைப்படுத்தலுக்கு உதவு ஆயுத படைக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.
அந்தவகையில், கொரோனாவின் தாக்கம் குறித்து இன்றைய நாளில் தற்போதுவரையான ஒருபார்வையே இது,
சீனாவின் நிலை
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் (வெள்ளிக்கிழமை) சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதை அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு சென்ற 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்புகள்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிங்கப்பூர் மற்றும் டுபாய் நாடுகளில் தலா ஒவ்வொருவர் அடங்கலாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நாடுகளில் கொரோனாவினால் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதன் முறையாகும்.
மோசமான நிலையில் நியூயோர்க்
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எணிக்கையானது 8,300 க்கும் மேல் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் அங்கு 53 ஆக காணப்படுகிறது.
நியோர்க்கின் ஆளுநர் வெள்ளிக்கிழமை அனைத்து தொழிலாளர்களையும் வீட்டிலேயே தங்கி தொழில்புரியுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், கொரோனா நோயாளர்களை சமாளிக்க மேலதிக மருத்துவ பொருட்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
மொத்தமாக அமெரிக்காவில் மொத்தமாக 18,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 258 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
அமெரிக்காவின் உப ஜனாதிபதி அலுவலகத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்:
அமெரிக்காவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸின் அலுவலகத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பென்ஸின் ஊடகத் தொடர்பாளர் ஒருவர் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுத்த இத்தாலி
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தலை அமுலுபடுத்த இத்தாலி தனது ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனாவினால் மிகவும் பாதுக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. 24 மணி நேர 627 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததுடன், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அங்கு நான்காயிரத்தையும் கடந்துள்ளது.
இதேவளை ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்கின்படி, 47,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.