பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது. தமிழீழ ...
Read More »கொட்டுமுரசு
13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கான இலக்குகள் இதுவரையில் அடையப்படவில்லை
கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான இலக்குகள் அடையப்படவில்லை. இந்நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல். பேராசிரியர் .ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொட விரைவில் பொறுப்பேற்கவுள்ளதோடு, அமைச்சரவை அந்தஸ்துடன் அவர் செல்ல வேண்டுமென ஜனாதிபதியே அதிக விருப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேட செவ்வியின் போது 13ஆவது திருத்தச்சட்டம், இந்தியாவுக்கான தூதுவர் மற்றும் சீனாவின் ஒரேபட்டி ஒரே பாதை திட்டத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் ...
Read More »அடக்கு முறைகளுக்கு அஞ்சாது மக்கள் எழுச்சி பெற வேண்டும்
இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபெற்று 20தினங்களை கடந்துள்ள நிலையில், அது தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது பல்வேறு இடறுபாடுகள், அடக்குமுறைகளை மீறி நடைபெற்றதானது தெற்கிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உரக்கச்சொல்லியிருக்கின்றதே உண்மையான விடயமாகும். சிங்களப் பேரினவாத சக்திகள் இந்த பொத்துவில் ...
Read More »ஜெனீவா மைய அரசியல் அல்லது வெளியாருக்காக காத்திருத்தல்
46 ஆவது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னும் பின்னுமாக தாயகத்திலும் டயஸ்போராவிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஜெனிவாவை மையமாகக் கொண்டு ஒரு போராட்டச் சூழல் தாயகத்திலும் டயஸ்போராவிலும் சிறிதளவுக்கு தமிழகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே கூடிக் கதைத்து புதிய கூட்டணிகளை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ஊடகங்கள் உருப்பெருக்கி சூடாக்கி விற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஜெனிவாவை நோக்கி ஒரு கொதிநிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியல் ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் இக்கட்டுரை பின்வரும் அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. ...
Read More »தீவிரவாத வேலைதிட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது – விக்டர் ஐவன்
சிங்கள-பௌத்த இனவாத சித்தாந்தத்தின் அரசியல் இயக்கமொன்றாகவும் மற்றும் அதன் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் இப்போது ஒரு வரலாற்று முடிவை எட்டியுள்ளன என்பதை வெளிப்படுத்த ‘தீவிரவாத சகாப்தத்தின் முடிவு’ என்ற தலைப்பில் கடந்த வாரம் பினான்சியல்டைம்ஸி ல் வெளியான கட்டுரை. கணிசமானஅளவுக்கு பொது வான விதத்தில் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது. இந்த கட்டுரையில், சிங்கள பௌத்தம் என்ற பெயரில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் செழித்து வளர்ந்து வரும் இந்த தீவிரவாத இனவாதம் அதன் வலுவின் உச்சத்தை எட்டிய அதே சமயம் ஒரு வரலாற்று ...
Read More »தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர் இனநாயக நாடாக சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது. ஓக்லாண்ட் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஓக்லாண்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான ...
Read More »மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ...
Read More »மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’
“பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் பையிலிருந்து தலையின்றி முண்டமாக மீட்கப்பட்ட குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதான திலினி யேஹன்சா என்ற யுவதியின் பேஸ் புக்கில் எழுதப்பட்டிருக்கும் வசனமாகும். அந்த யுவதி, ஒரு இளைஞர் சமூக ஆர்வலர், சமூகத்தில் நல்மதிப்பை கொண்டிருந்தவர், ஆனால், திருமணம் முடித்த ஒருவருடன் ஏற்பட பேஸ்புக் காதலால், தலையிழந்து முண்டம் கண்டம் துண்டங்களாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். தான் நேசித்த பெண்ணை இதயம் இல்லாமல் யாராவது ...
Read More »ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்தியா ...
Read More »இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. ‘தமது மோசமான மனித உரிமைகள் வரலாற்றைப் பற்றியும் பரவலாக இடம்பெறும் தண்டனையற்ற குற்றங்களைப் பற்றியுமான சர்வதேச விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக, எவ்வித ஒழுங்குமற்ற ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரலாறொன்று இலங்கைக்கு இருக்கிறது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், குறைந்த பட்சம் அவ்வாறான 10 ஆணைக்குழுக்களையாவது இலங்கை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal