பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் 1933-ல் பிறந்த ஃப்ரான்ஸுவா குரோ (1933-2021) தன் இளம் வயதிலேயே இந்தியவியல் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். லுய் துய்மோன், லெ ருவா குரோன், ழான் ஃபிலியோஸா முதலான அறிஞர்களிடம் பெற்ற பயிற்சி அதைச் செம்மைப்படுத்தியது. சிலகாலம் அல்ஜீரியாவுக்குக் கட்டாய ராணுவ சேவைக்காக அனுப்பப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கல்வி கற்பதை நோக்கித் திரும்பிய குரோ இந்தி, சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். புதுச்சேரியில் பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டில் அப்போதைய இயக்குனராக இருந்த ழான் ஃபிலியோஸாவால் ...
Read More »கொட்டுமுரசு
இரத்த சரித்திரத்தில் கிடைத்த 8 மணி நேர வேலை உரிமை
உலகம் முழுவதும் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு பின்னால் அமெரிக்க தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வரலாறு. உலக தொழிலாளர்களின் உரிமைக் குரலாக கம்யூனிஸ்ட் கொள்கைகள் வளர்த்து எடுக்கப்பட்ட பின்னர், அந்த கொள்கைகள் தொழில்புரட்சியில் முன்னிலை வகித்த அமெரிக்காவிலும் பரவிக் கொண்டிருந்தன. 1880 ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் செயல்பட்ட தொழிலாளர் இயக்கங்களை ஒருங்கிணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்கிற இயக்கம் உருவாக்கப்பட்டது. அந்த இயக்கம், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி ...
Read More »அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……?
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன் பரிந்துரைகளையும் நார் நாராகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் நியமனம் குறித்த சட்டவலுவும் கூட கடுமயான சட்டரீதியான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு நாட்டில் நிலவுகின்ற ஜனநாயக ஆட்சிமுறையின் அதிகார வலுவேறாக்கல், நீதித்துறையின் சுதந்திரச் செயற்பாடு, சட்டமா அதிபரின் பக்கம் ...
Read More »‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்’
தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் ...
Read More »பொறுப்புக்கூறல் : ஒரு முடிவற்ற தேடலா ? ”
பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும் எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தவிர வேறெவராலும் இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு போர் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனேயே இந்த பதம் அதிகமா தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகின்றது இலங்கையில் ஆட்சியாளர்களை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தாமல் அவர்களுக்கு அடிபணியும் கலாச்சாரமே காணப்படுவதோடு, இங்கு அரசியல் தலைவர்களை கடவுளை போல பார்க்கும் நிலையும் உள்ளது இத்தகைய சூழலில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கூறல்களுக்கான கோரிக்கைகளை நியாயமாக ...
Read More »சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம்
இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுடன், ...
Read More »சந்தித்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரி.அந்த நாள் குழப்பகரமானதாக காணப்பட்டது!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் புதியமுகங்கள் காணப்படும்போது அவர்களை போதகர் வரவேற்பது வழமை.குணப்படுத்தும் தேவாலயம் என்ற அடிப்படையில் அங்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் வரவேற்கப்படுவது வழமை. இரண்டு வருடங்களிற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அதிகாலை போதகர் கணேசமூர்த்தி திருக்குமரன் முன்னர்அறிமுகமாக நபரை நோக்கி தனது கரங்களை நீட்டினார்.ஆனால் அந்த நபர் அதனை ஏற்கவில்லை.ஆனால் அந்த நபர் தனது பெயர் ஓமர் என தெரிவித்தார். போதகர் வேறு தேவாலயத்திற்கு செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார், சற்று தூரம் சென்ற பின்னர் அவர் மட்டக்களப்பு தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது என்பதை ...
Read More »சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’
காங்கேசன்துறை (கே.கே.எஸ்) சிமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில் இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள் அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. காணாமல் போன இயந்திரங்களுக்குஇதுவரை ஒருவரினாலும் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை. அவற்றை விற்றவர் யார்?, எந்த நோக்கத்திற்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது, ஆனால் சிமெந்து தொழிற்சாலையின் 20க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர், ஏனெனில் ...
Read More »மூத்த மருத்துவ போராளி அருள் காலமானார்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நேசித்த மற்றுமொரு மருத்துவ போராளி மண்ணை விட்டு பிரிந்துள்ளார். விடுதலைப்போராட்டத்தில் சுமார் இரு தசாப்தங்களாக மருத்துவ போராளியாக பணியாற்றிய மருத்துவர் அருள் நேற்று மண்ணை விட்டு பிரித்துள்ளார். மருத்துவ போராளியான அருள் என்றழைக்கப்படும் இராசையா யதீந்திரா போராளிகளினதும் மக்களினதும் இறுதி யுத்தம் வரையாக உயிரைக் காத்த ஒரு மருத்துவன் என நண்பர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். போரின் பின்னான தன் அமைதியான வாழ்க்கை போலவே அமைதியாக அவர் விடைபெற்றுக் கொண்டு விட்டார் என அவருடன் கூட பயணித்த போராளிகள் நிiவுகூர்கின்றனர். விபத்தொன்றில் காயமடைந்த மருத்துவர் ...
Read More »மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது?
மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal