சந்தித்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரி.அந்த நாள் குழப்பகரமானதாக காணப்பட்டது!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் புதியமுகங்கள் காணப்படும்போது அவர்களை போதகர் வரவேற்பது வழமை.குணப்படுத்தும் தேவாலயம் என்ற அடிப்படையில் அங்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் வரவேற்கப்படுவது வழமை.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அதிகாலை போதகர் கணேசமூர்த்தி திருக்குமரன் முன்னர்அறிமுகமாக நபரை நோக்கி தனது கரங்களை நீட்டினார்.ஆனால் அந்த நபர் அதனை ஏற்கவில்லை.ஆனால் அந்த நபர் தனது பெயர் ஓமர் என தெரிவித்தார்.

போதகர் வேறு தேவாலயத்திற்கு செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார், சற்று தூரம் சென்ற பின்னர் அவர் மட்டக்களப்பு தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தார்.


அவர் சற்று முன்னர் சந்தித்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரி.அந்த நாள் குழப்பகரமானதாக காணப்பட்டது அன்று மாலையே தேவாலயத்தில் கொல்லப்பட்ட 14 குழந்தைகளில் தனது 12 வயது மகனும்Shalom Malchiah,  கொல்லப்பட்டதை அறிந்தார்.

இரண்டு வருடங்கள் கடந்தபின்னரும் சலோமை இழந்த துயரத்தில் அவரின் குடும்பம் தவிக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்கள் மிகவும் துயரமானவையாக காணப்பட்டன சமாளிப்பது கடினமாகயிருந்தது ஆனால் மருத்துவதேவைகளிற்காகவும் உளவியல் ஆற்றுப்படுத்தலிற்காகவும் பலர் நிதி உதவி வழங்கினார்கள் என அமைதியான மென்மையான போதகர் திருக்குமரன் தெரிவித்தார்.

அவர் தனது துயரத்தினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டவர் போல தோன்றுகின்றார்.
பல நிறுவனங்களும் அமைப்புகளும் அந்த சமூகத்திற்கு உதவிதேவைப்பட்டதருணத்தில் உதவமுன்வந்தன.

கடந்த வருடம் கொவிட் 19 காரணமாக அவர்களால் நினைவஞ்சலிகளை உரிய முறையில் முன்னெடுக்கமுடியவில்லை இம்முறையும் அவை அமைதியான விதத்திலேயே இடம்பெறப்போகின்றன.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற தேவாலயத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.தேவாலயத்தை சுற்றி இடிபாடுகளின் குவியலை காணமுடிகின்றது, சுவர்களில் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சேதத்தை காணமுடிகின்றது.


முன்னைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகாரணமாக கூரைதிருத்தப்பட்டுள்ளது,வாயில் கதவில் இது இராணுவம் நிர்மாணிக்கும் பகுதி என்ற அறிவிப்பை காணமுடிகின்றது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

எனினும் சர்வதேச அளவிலும் உள்நாட்டிலிருந்தும் கிடைக்கின்ற பெரும் நிதி காரணமாக இன்னொரு இடத்தில் விசாலமான பெரிய தேவாலயமொன்றைஅமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.
தனது கண்பார்வையை முழுமையாகவும் நடமாடு திறனை சிறிதளவும் இழப்பதற்கு முன்னர் டெபி துடிப்பு மிகுந்த குழந்தை டெபி ஒரு போதும் நடந்ததில்லை அவள் எப்போதும் ஓடினாள் தனது சகோதரரை கேலி செய்வாள் என அவளது உறவினரும் தற்போது அவளை பராமரிப்பவருமான வதனி மோசஸ் தெரிவிக்கின்றார்.

குண்டுவெடிப்பில் சிக்கிய டெபியை மருத்துவர்கள் பல சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தினார்கள் – மூளையிலிருந்து கால்வரை சத்திரகிசிச்சையை அவர்கள் மேற்கொண்டனர்.

டெபி மெல்லமெல்ல காயங்களில் இருந்து குணமடைந்து வருகின்ற நிலையில் அவளது உணர்வுகள் மீள திரும்புகின்றன-அவள் பாடசாலைக்கு செல்கின்றாள் அதேவேளை குண்டுவெடிப்பில் தனது பெற்றோர் இருவரையும் இழந்த துயரத்தையும் அனுபவிக்கின்றாள்
ஆனால் அவள் தன்னால் ஏன் பார்க்கமுடியவில்லை என கேள்வி எழுப்புகின்றாள் .இயேசுநாதர் ஒருநாள் தனது கண்பார்வையை மீண்டும் தருவார் என அவள் தெரிவிக்கின்றாள்.ஒரு கண் முற்றாக பாதிக்கப்பட்டுவிட்ட நிலையில் மற்ற கண்பார்வையை பெறுவதற்கான சத்திரகிசிச்சைக்காக அவள் கனடா செல்ல திட்டமிடுகின்றாள்.