இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்படையுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா. கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருகோணமலைக் கடலில், அமெரிக்க கடற்படையின் சீல் என்று அழைக்கப்படும் சிறப்பு கொமாண்டோ அணியினர், இலங்கை கடற்படையினருடன், பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் 19 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி வரை தொடரும் என்று தகவல்கள் கூறுகின்றன. ...
Read More »கொட்டுமுரசு
“ஒற்றையாட்சி” பற்றி சுமந்திரன் சொல்வது உண்மையா?? – குமாரவடிவேல் குருபரன்
15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார்த்தைப் பிரயோகம் ...
Read More »“மாற்றத்தைப்” பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு – நிலாந்தன்
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகபட்சம் ...
Read More »முடியிழந்த மரங்கள் – பாலமுருகன் திருநாவுக்கரசு
புங்குடுதீவில் நடந்த கொடூரமும் தொடர்ந்து நடைபெற்ற நில சம்பவங்களும் எமக்கு பல செய்திகளை சொல்லி நிற்கிறது. இங்கு நான் பதிவிடுவது , நானறிந்த நான்கைந்து சம்பவங்களினை மட்டுமே. இதன் தொகுப்பும் முடிவும் உங்களுடையது. 1) புங்குடுதீவு கொடூரத்தையும் அதை ஒத்த அண்மைய சமூகநெறிப்பிறழ்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அநேகர் ( இளைஞர்கள்) போதைக்கு அடிமையானவர்களே என்பது நடக்கின்ற விசாரணைகளில் இருந்து தெரிகிறது. 2) யாழ்மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் ( முக்கியாமய் பாடசாலைகளுக்கு அருகில் ) பலதடவை ஆதாரத்துடன் பொலிஸுக்கு ...
Read More »வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன்
அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் தரப்பானது தனது சமூகத்திற்குள்; வாழும் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளையிட்டு ஏன் அந்தளவிற்கு அக்கறைப்படுவதில்லை என்று?” அவருடைய கேள்வி ...
Read More »வடக்கு மக்களாலே என்னில் மாற்றம் ஏற்பட்டது: மக்களின் எண்ணத்தை செயற்படுத்துகிறேன்: முதல்வர் விக்கி
வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்படு கொலைத் தீர்மானத்தை நிறை வேற்றியமை, இராணுவ வெளியேற்றம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியமை, 13ஆம் திருத்தச்சட்டம் இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல எனச் சுட்டிக்காட்டியமை உள்ளிட்ட பல கருத்துக்களால் அண்மைய காலத்தில் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி. வி. விக்கினேஸ்வரன் மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ...
Read More »தமிழரசு கட்சி தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை சகாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரைத்தசாப்த கால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய ...
Read More »பறிக்கப்படுமா தமிழரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்?
இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் விவகாரம் இப்போது முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக இருப்பதால், கலப்பு பிரதிநிதித்துவ முறைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்த தொகுதிவாரி தேர்தல் முறைமையை தனது வசதி கருதி, 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முற்றாகவே இல்லாமல் செய்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்போது பாராளுமன்றத்தில் பெற்றிருந்த அசுர பலத்தைக் கொண்டு, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலையெடுக்க ...
Read More »புலத்துதமிழரை வழிக்கு கொண்டுவரும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை பின்னனிகள்!!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் எதனைப் பற்றியவை? குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னனி என்ன? என்பது பற்றி தமிழ்ச்சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொள்கின்றார். சிங்கப்பூர் கூட்டம் தொடர்பாக உலகத் தமிழ்ப் பேரவையின் ஊடக அறிக்கை: நேர்காணலில் குறிப்பிடும் தமிழ்நெட் செய்தி நேர்காணலில் குறிப்பிடும் In Transformation Initiatives பணிப்பாளரின் நேர்காணல் நேர்காணலில் குறிப்பிடும் ட்விட்டர் உரையாடல் மூலம் – https://rkguruparan.wordpress.com/2015/04/15/singaporeprocess/
Read More »அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal