உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு, விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ...
Read More »கொட்டுமுரசு
15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி?
தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் உயிருடன் மீண்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறுவர்களுடன் சென்ற துணைப் பயிற்சியாளர் முன்னாள் பவுத்தத் துறவி என்பதும், அவரின் பல்வேறு பயிற்சிகள் மூலம் சிறுவர்களை சோர்வடையாமல் பார்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு. தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து ...
Read More »காதலை நிரூபிக்க நடந்த சோதனையில் துயரம்!
காதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் அதுல் லோக்ஹண்டே. இவர் பாரதிய ஜனதா கட்சியின், இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். லோக்ஹண்டே கடந்த சில ஆண்டுகளாக 27 வயது பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் லோக்ஹண்டேவை தீவிரமாகக் காதலித்துள்ளார். ஆனால், இருவரின் திருமணத்துக்கு பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணிடம் ...
Read More »நாடாளுமன்றத்தைக் குலுக்கிய அந்த நான்கு வார்த்தைகள்!
யாழ்ப்பாணம்–வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரசதலைவர் மக்கள் சேவை நிகழ்வின்போது இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில் வெளியிடப்பட்ட நான்கு வார்த்தைகள் பெரும் பூகம்பமாக மாறி, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வானேறி, நாடு முழுவதும் இரவோடிரவாகப் பரந்து அடுத்த நாளில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வையே அதிர்ந்து குலுங்க வைத்துவிட்டன. அந்த வார்த்தைகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியினர், பதினான்கு பேர்கள் கொண்ட அணி, அரச தரப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர் என எவரையும் விட்டுவைக்காமல் கொதித்தெழ வைத்துவிட்டன. பாதுகாப்புப் பிரதியமைச்சர் ருவான் விஜயவர்த்தனா அவை உண்மைக்குப் ...
Read More »யாழ்ப்பாணத்து வன்முறைகள்! -சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்!
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு.முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையென்று. இராணுவத்தைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களைத் தந்தால் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயலாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். சுமந்திரன் கூறுகிறார் கிராமமட்ட விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டுமென்று. தமிழ் மக்கள் தங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற ...
Read More »ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?
இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது. அதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது. அம்பாந்தோட்டைத் ...
Read More »அதிகரிக்கும் வன்முறைகள்!- பி.மாணிக்கவாசகம்
நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படுவதே உண்மையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குரிய இலட்சணமாகும். அந்த வகையில் தற்போதுள்ள நிலைமையை ...
Read More »நல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும்?
ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. `நம் ஒவ்வொருவராலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ – நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் அமெரிக்க அரசியல்வாதியும் மேரிலேண்டின் செனட்டராகவும் பணியாற்றிய பார்பரா மிகுல்ஸ்கி (Barbara Mikulski). வீடு, அலுவலகம், சமூகம்… எதுவாகவும் இருக்கட்டும்… ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. அதற்கு முதலில், `நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வேண்டும்; விடா முயற்சி வேண்டும்; எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வேண்டும். இதற்கெல்லாம் ...
Read More »கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?
இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த ...
Read More »இரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும்!
இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன? அது எப்படி எடுக்கப்படுகிறது? அதனை எப்படிக் கைவிடலாம்? கைவிடுவதென்றால் எந்த நாட்டுக் குடியுரிமையைக் கைவிடலாம்? என்பது பற்றியெல்லாம் எந்தவிதத் தெளிவும் இல்லாமல் சில ஊடகங்களில் செய்திகள் என்ற பெயரில் தகவல்கள் வெளிவருகின்றன. அப்படிச் செய்ய முடியும், இப்படிச் செய்யமுடியாது, அந்தநாடு விடாது, இந்தநாடு அனுமதிக்காது, அவரால் கைவிடவே முடியாதாம், இவரால் இரண்டுமாதங்களில் கைவிட முடியுமாம் என்றெல்லாம் நக்கலாகவும், நகைச் சுவையாகவும்கூடச் சில செய்திகளைப்பார்க்கிறோம். அதனால், இரட்டைக் குடியுரிமை பற்றிய சில விடயங்களையும், இலங்கை அரசியலில் அதன் தார்ப்பரியங்களையும் பற்றிச் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal